உள்ளக் களிப்பு தரும் உள்ளூர் சுற்றுலா

விடுமுறையின்போதும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது பற்றி நினைக்கவே முடியாதபடி செய்துவிட்டது கொவிட்-19 நோய்ப் பரவல். இத்தகைய சூழலில், உள்ளூரிலேயே சுற்றுலா சென்று இன்புறவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடவும் உதவுவதோடு, முடங்கிப்போன சுற்றுப்பயணத் துறைக்கும் புத்துயிர் அளிக்கிறது ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்’ எனும் சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலாப் பற்றுச்சீட்டுகள்.

ஒரு தாயின் விருப்பம்

பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு சிங்­கப்­பூ­ரிலே சொகுசு ஹோட்­ட­லில் தங்கி விடு­மு­றை­யைக் கழிப்­பது என்­பது பெரும்­பா­லா­னோர் செய்­யாத ஒன்று. பொது­வாக வெளி­நாட்­டிற்­குச் செல்­வது அல்­லது சிங்­கப்­பூ­ரில் வெவ்­வேறு இடங்­க­ளுக்­குச் செல்­வது போன்ற நட­வ­டிக்­கை­க­ளில்­தான் ஈடு­ப­டு­வர். ஆனால் 37 வய­தான திரு­மதி புவனா ராம­லிங்­கத்­திற்கு ‘ஸ்டே­கே­ஷன்’ என்­பது மிக­வும் பரிச்­ச­ய­மான ஒன்று.

சிங்­கப்­பூர் அஞ்­சல்­து­றை­யில் வேலை செய்­து­வந்த தம் தந்தை, 25 ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஒவ்­வோர் ஆண்­டும் குடும்­பத்­தி­னர் அனை­வ­ரை­யும் நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளுக்கு அழைத்­துச் சென்­றதை திரு­மதி புவனா நினை­வு­கூர்ந்­தார்.

“விடு­முறை நாள்­கள் வந்­தாலே ஹோட்­டல்­க­ளுக்­குச் சென்று, அங்­குள்ள நீச்­சல்­கு­ளத்­தில் விளை­யா­டு­வது, ஹோட்­டல் அறை­யில் இருக்­கும் குளி­யல் தொட்­டி­யில் விளை­யா­டு­வது என உற்­சா­கத்­து­டன் இருப்­பேன். அப்­போ­தெல்­லாம் எங்­கள் வீட்­டில் குளி­ரூட்டி இல்லை. ஹோட்­டல் அறை குளு­கு­ளு­வென இருந்­தது எனக்கு மிக­வும் பிடித்­துப்­போ­னது. சிறு வய­தில் பெற்­றோர்­ அழைத்­துச் சென்ற இடங்­களுக்கு எல்­லாம் மகிழ்ச்­சி­யு­டன் சென்று, கவ­லை­யின்றி நேரத்­தைக் கழித்­தேன். இப்­போது அதே மகிழ்ச்­சியை என் பிள்­ளை­க­ளுக்­குத் தர விரும்­பு­கி­றேன்,” என்­றார் திரு­மதி புவனா.

இவ­ருக்­குத் தொடக்­கப் பள்­ளி­யில் பயி­லும் இரண்டு பிள்­ளை­கள் இருக்­கின்­ற­னர். பள்ளி விடு­முறை நாள்­களில் அவர்­க­ளு­டன் சேர்ந்து பல்­வேறு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட வேண்­டும் என்று திட்­ட­மிட்­டி­ருந்த இவ­ருக்­குத் தக்க சம­யத்­தில் கைகொ­டுத்­தன ‘சிங்­கப்­பூர் ரீடிஸ்­கவர்ஸ்’ பற்­றுச்­சீட்­டு­கள்.

இம்­மா­தம் 14ஆம் தேதி தம் கண­வர், பிள்­ளை­கள், பெற்­றோர் என குடும்­பத்­தி­னர் அனை­வருடனும் நான்கு நட்­சத்­திர ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் மூன்று நாள்­, இரண்டு இர­வு­ தங்கி, இவர் மகிழ்ச்­சி­யு­டன் பொழு­தைக் கழித்தார்.

அத்­து­டன், கடந்த ஒரு மாத­மாக புக்­கிட் தீமா மலை உச்சி, கம்­போங் லோரோங் புவாங்­காக், சிங்­கப்­பூர் விலங்­கி­யல் பூங்கா, மெக்­ரிச்சி நீர்த்­தேக்­கம் என, சிங்­கப்­பூ­ரின் பல இடங்­க­ளுக்­கும் இவர்­கள் சென்று வந்­த­னர்.

“சிங்­கப்­பூ­ரி­லேயே நான் கண்டு இராத பல இடங்­கள் உள்­ளன. என் மகள் மேனகா பார்த்­தி­பன் தொடக்க நிலை நான்­கில் பயின்­ற­போது சமூக அறி­வி­யல் பாடத்­தில் சிங்­கப்­பூ­ரின் சிறப்­பு­மிக்க இடங்­க­ளைப் பற்­றி­யும் அவற்­றின் வர­லாறு பற்­றி­யும் கற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டது. அதற்­காக அந்த இடங்­க­ளுக்கு நேர­டி­யாக அவர்­களை அழைத்­துச் சென்று காண்­பித்­தேன். அவர்­க­ளுக்கு அந்­தச் சுற்­றுலா மிக­வும் பிடித்­தி­ருந்­தது. அப்­போ­து­தான் குடும்­ப­மா­கச் சேர்ந்து நிறைய இடங்­க­ளுக்கு செல்­லத் தொடங்­கி­னோம்.” என்று சொன்னார் திருமதி புவனா.

இன்­னும் பல மாதங்­கள் வெளி­நாட்­டிற்­குச் செல்ல முடி­யா­மல் போக­லாம் என்­ப­தால், ‘சிங்­கப்­பூர் ரீடிஸ்­க­வர்ஸ்’ பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பயன்­படுத்தி, பள்ளி திறப்­ப­தற்­கு­முன் கோனி தீவு, செயின்ட் ஜான்ஸ் தீவு போன்ற இடங்­க­ளுக்­கும் செல்­வதற்குத் திட்­ட­மிட்­டுள்­ளார்.

தனியே தன்னந்தனியே...

பிற­ரு­டன் பகிர்ந்­து­கொள்­ளும்­போது தான் மகிழ்ச்சி பன்­ம­டங்­கா­கும் எனக் கூறு­வர். ஆனால், தனி­மை­தான் தமக்கு எப்­போ­தும் மகிழ்ச்­சி­யைத் தரு­வ­தா­கக் கூறு­கி­றார் குமாரி சரிகா நிஷாய்னி, 24 (படம்).

பல ஆண்­டு­க­ளா­கத் தனி­யாக வெளி­நா­டு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வதை வழக்­க­மாகக் கொண்­டுள்­ளார் சரிகா. பல நாடு­க­ளின் இயற்கை வளங்­கள், பல்­வகை கலா­சா­ரங்­கள், அங்­குள்ள மக்­க­ளின் வாழ்க்கைமுறை­கள் போன்­ற­வற்­றைப் பார்த்து அறிந்துகொள்வது இவ­ருக்­குப் பிடித்­த­மான ஒன்று. அவ்வகையில், கடந்த மார்ச் மாதம் வியட்னாம் சென்று வந்தார் இவர்.

இப்படி எப்போதும் துறுதுறுவென வெளியே சுற்றிக்கொண்டிருந்த இவரை, வீட்டிற்குள்ளேயே மூன்று மாதகாலம் முடக்கிப்போட்டது நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம்.

ஆயி­னும், கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­வு­டன் உள்ளூரிலேயே பல்­வேறு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட சரிகா ஆயத்­த­மா­னார்.

நண்­பர்­களும் மற்­ற­வர்­களும் செல்­லும் இடங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் பார்த்து அங்கு கால்­ந­டை­யா­கவே செல்­லத் தொடங்­கி­னார். இப்­படி நடந்தே செல்வதால் முழு­மை­யா­கச் சுற்றி பார்க்­கும் வாய்ப்பு கிடைப்­ப­தோடு உடற்­ப­யிற்­சி­யும் செய்­த­து­போல் இருக்­கும் என்கிறார் இவர். அண்­மை­யில் ‘சிங்­கப்­பூர் ரீடிஸ்­க­வர்ஸ்’ பற்­றுச்­சீட்­டைக் கொண்டு சிங்­கப்­பூர் அறி­வி­யல் மையத்­தின் பல கண்­காட்சி­க­ளுக்­குச் சென்று வந்­தார்.

பாறை­யேற்­றம், ‘கயாக்’ பட­கோட்­டம், சாங்­கி­யில் உள்ள ஜுரா­சிக் மைலுக்­குப் பய­ணம், ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வில் மிதி­வண்டி ஓட்­டு­தல் என, கடந்த இரு மாதங்­களில் பல நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட சரிகா, சிறப்­புத் தேவை­கள் உள்ள பிள்­ளை­க­ளுக்­கான ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார்.

சரி­கா­விற்கு பல நாடு­க­ளின் உணவு வகை­க­ளைச் சுவைத்­துப் பார்க்க ஆசை. கடந்த சில மாதங்­களாக சிங்­கப்­பூ­ரி­லேயே பிற நாட்­டின் சிறப்­பு­மிக்க உணவு வகை­களை விற்­கும் உண­வ­கங்­க­ளைத் தேடிச் சென்று, அந்த உணவு வகைகளைச் சுவைத்து வருகிறார்.

அடுத்­த­தாக சிங்­கப்­பூர் மர­பு­டை­மைச் சுற்­றுலா செல்ல திட்­ட­மிட்­டுள்ள சரிகா, “சிங்­கப்­பூ­ரில் இத்­தனை ஆண்­டு­க­ளாக இருந்­தா­லும் என்­னைப் போன்ற பல­ருக்கு நம் நாட்­டில் உள்ள இடங்­க­ளின் முக்­கி­யத்­து­வம், வரலாறு பற்றி அதி­கம் தெரி­வ­தில்லை. கிடைத்­தி­ருக்­கும் இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி நம் நாட்­டி­லுள்ள பொக்­கி­ஷங்­க­ளைப் பற்றி தெரிந்து­கொள்­வோம்.” என்­றார்.

அம்மாவின் முகம் மலர, பிள்ளைக்கு மனநிறைவு

இல்லத்தரசியாக இருந்து வீட்டிலேயே அதிக நேரத்தைச் செலவிடும் அம்மா திருமதி லட்சுமி கோவிந்தராஜை எங்கேனும் வெளியே அழைத்துச் செல்லவேண்டும் என்று, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வரும் 27 வயது பரதன் சந்திரசேகரனுக்கு (படத்தில் அம்மாவுடன்) ஆசை. இந்த டிசம்பர் விடுமுறையில், ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்’ பற்றுச்சீட்டின் துணையுடன் அந்த ஆசை நிறைவேறியது. “என் அம்மாவிற்கு அதிகம் வெளியே செல்வதும் அலைச்சலும் பிடிக்காது. இந்தப் பற்றுச்சீட்டுகள் கிடைத்தபோது இதுவரை சென்றிராத இடத்திற்கு தம்மை அழைத்துச்செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூர் வான்வெளியைப் பார்த்து ரசிப்பது அவருக்குப் பிடிக்கும் என்பதால் சிங்கப்பூர் ராட்டினத்திற்குச் சென்றோம். ராட்டினப் பயணம் ஏறத்தாழ 30 நிமிடங்கள் நீடித்தது. அப்பயணம் அம்மாவிற்கு மிகவும் பிடித்துப்போனது. உயரே செல்ல செல்ல அவரின் முகமும் மலர்ந்தது. அங்கு தெரிந்த கட்டடங்களை அடையாளம் கண்டு என்னிடம் கூறி மகிழ்ந்தார். மறக்க முடியாதபடி அப்பயணம் அமைந்தது,” என விவரித்தார் பரதன்.

முன்பதிவு செய்ய முதியோர்க்கு உதவிக்கரம்

‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்’ பற்றுச்சீட்டுகளைப் பெறுவது தொடர்பாக உதவி தேவைப்படும் முதியோர்க்கு நாடெங்கும் உள்ள முதியோர் செயல்பாட்டு மையங்களில் முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. “என் வயதில் உள்ள பெரும்பாலானோருக்கும் இணையம் வழி முன்பதிவுத் தளங்களுக்கு செல்வது எப்படி என்பதுகூடத் தெரிந்திருக்காது. எனது அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு மிக அருகில் இந்த முனையம் அமைந்திருப்பதால் எனக்கு வசதியாக இருந்தது. எந்தவிதமான சுற்றுலாக்களுக்கு செல்லலாம், என்னென்ன இடங்கள் இருக்கின்றன போன்ற ஆலோசனைகளையும் வழங்கினர்,” என்றார் பொங்கோல் முதியோர் செயல்பாட்டு மையத்திற்கு வந்திருந்த திருமதி வெங்கடாச்சலம் அஞ்சம்மாள், 65 (படம்). “இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பேரப்பிள்ளைகளுடன் பயணப்படகில் செல்வோம் அல்லது செந்தோசா தங்குவிடுதியில் சில நாள்கள் தங்குவோம்,” என்றார் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!