வீட்டு விலையேற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் அரசு இறங்கக்கூடும்

அதி­க­ரித்து வரும் வீட்டு விலை­க­ளைக் குறைக்க சிங்­கப்­பூர் மீண்­டும் நட­வ­டிக்கை எடுக்­கக்­கூ­டும் என்று சொத்­துச் சந்தை நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அண்­மை­யில் துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான ஹெங் சுவீ கியட் தெரி­வித்த கருத்­து­கள் இதைக் காட்­டு­வ­தாக அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூர் சொத்­துச் சந்தை, தொடர்ந்து நிலை­யாக இருப்­பதை உறு­தி­செய்ய அர­சாங்­கம் அதை மிக அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கும் என்று சிங்­கப்­பூர் சொத்­துச் சந்தை மேம்­பாட்­டா­ளர்­கள் சங்­கம் நடத்­திய நிகழ்ச்­சி­யில் திரு ஹெங் இணை­யம் வழி தெரி­வித்­தார்.

“பொரு­ளி­யல் சூழல் நிச்­ச­ய­மற்ற நிலை­யில் இருப்­ப­தால் அரசாங்கம் தொடர்ந்து விழிப்­பு­டன் இருந்து சொத்து விலை­களை உன்­னிப்­பா­கக் கண்­கா­ணிக்கும்.

“யதார்த்த பொரு­ளி­யல் நிலை­யைக் கடந்து சொத்­துச் சந்தை கட்­டுக்­க­டங்­கா­மல் போகக்­கூ­டாது,” என்­றார் திரு ஹெங்.

புத்­தாக்­கத்­து­டன் செயல்­படும் அதே வேளை­யில், சிங்­கப்­பூ­ரர்க­ளின் வாழ்க்­கைத் தரத்தை மேம்­ப­டுத்­து­வதே முக்­கிய இலக்கு என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது என்று சொத்து மேம்­பாட்­டா­ளர்­க­ளுக்கு திரு ஹெங் நினை­வூட்­டி­னார்.

இளம் சிங்­கப்­பூ­ரர்­கள் சொந்த வீடு வாங்­கக்­கூ­டிய அள­வுக்கு வீட்டு விலை­கள் இருக்க வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

வீடு­க­ளைக் கட்ட நிலங்­க­ளுக்­கான ஏலக் குத்­த­கை­யில் நியா­ய­மான விலையை முன்­வைக்­கும்­படி சொத்து மேம்­பாட்­டா­ளர்­களை தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ கேட்டுக்கொண்டார்.

அது­மட்­டு­மல்­லாது, நிச்­ச­ய­மற்ற பொரு­ளி­யல் சூழல் நில­வு­வ­தால் சொத்­து­களை வாங்­கும்­போது கவ­னம் தேவை என சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அவர் அறி­வு­றுத்­தி­னார்.

இந்­நி­லை­யில், வீட்டு விலை அதி­க­ரிப்­பைத் தணிக்­கும் முயற்­சி ­யாக முத்­திரை வரித் தொகையை மாற்றி அமைத்­தல், வீட்­டுக் கடன்­க­ளுக்­கா­கக் கொடுக்­கப்­படும் தொகையை இறுக்­கு­வது, புதிய வீடு­க­ளுக்­கான பரப்­ப­ளவை மாற்றி அமைப்­பது போன்ற நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­ட­லாம் என்று டிபி­எஸ் குழு­மம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த இரண்டு ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு சிங்­கப்­பூ­ரில் உள்ள தனி­யார் வீடு­க­ளின் விலை கடந்த ஆண்­டின் இறு­திக் காலாண்­டில் உச்­சத்தை எட்­டின.

கடந்த ஆண்­டில் தனி­யார் வீடுக­ளின் விலை 2.2 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

இதற்­கி­டையே, வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­க­ளின் விலை கடந்த ஆண்டு 4.8 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

வீவக வீடு­க­ளின் விலை 2019ஆம் ஆண்­டில் 0.1 விழுக்­காடு அதி­க­ரித்­தது. 2018ஆம் ஆண்­டில் அது 0.9 விழுக்­காடு சரிந்­தது.

வீட்டு விலை­க­ளைத் தணிக்க மீண்­டும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டால் வீடு விற்­பனை குறை­யும் என்­ற­போ­தி­லும் குறைந்த வட்டி விகி­தம் போன்ற கார­ணங்­க­ளால் வீடு­கள் தொடர்ந்து விற்­கப்­படும் என்று ஜெஃப்ரிஸ் நிதி குழு­மத்­தின் பகுப்­பாய்­வா­ள­ரான திரு கிருஷ்ணா குஹா தெரி­வித்­தார்.

கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்ட நெருக்­க­டி­நி­லையை எதிர்­கொள்ள எடுக்­கப்­பட்ட நட­

வ­டிக்­கை­கள், ஒட்­டு­மொத்த வீடு­கள் விற்­ப­னைத் திட்­டம் மீண்­டும் தொடங்­கக்­கூ­டும் என்ற எதிர்­பார்ப்பு, கடந்த பத்து ஆண்­டு­க­ளாக வளர்ச்சி கண்ட வரு­மா­னம் ஆகி­யவை பாதிப்­பைக் குறைக்­கும் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!