மறுவிற்பனை வீட்டு விலை சற்று உயர்வு

சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் மறுவிற்பனை வீட்டு விலைக் குறியீட்டெண் 134.8 ஆக அதிகரித்தது. முந்தைய காலாண்டை ஒப்பு நோக்கையில் இது 0.1% அதிகம் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) நேற்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. வீவக மறுவிற்பனை வீட்டு விற்பனைச் சந்தையின் பொது வான விலை நிலவரம் பற்றிக் குறிப்பிடும் இந்த மறுவிற்பனை வீட்டு விலைக் குறியீட்டெண், ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் 1.6% சரிவு கண்டது.

அதே நேரத்தில், கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை 4,992 ஆக, அதாவது 2% கூடியது. 2015 மூன்றாம் காலாண்டில் இந்த எண்ணிக்கை 4,893 ஆக இருந்தது. ஒட்டுமொத்த அளவில், 2015ல் மட்டும் 19,306 வீவக வீடுகள் மறுவிற்பனை செய்யப் பட்டன. முந்தைய 2014ஆம் ஆண்டைவிட இது 11.5% அதிகம். அதேபோல, 2015 இறுதிக் காலாண்டில் உள்வாடகைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக் கையும் 6% ஏற்றம் கண்டு 10,618 ஆனது. மூன்றாம் காலாண்டில் இப்படி உள்வாடகைக்கு விட 10,018 வீடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!