தர்மன்: பின்னடைவுகளை எதிர்கொள்ள தயாராகுக

தர்மன்: பின்னடைவுகளை எதிர்கொள்ள தயாராகுக

1 mins read
fa34e4e2-468f-44a5-aa7a-ec5552d46b77
(கடிகார சுற்று முறைப்படி இடது மேல்புறத்திலிருந்து) கலந்துரையாடலை வழிநடத்திய ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் இணை ஆசிரியர் கிடியோன் ராச்மான், மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், இந்தியாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, விடிபி வங்கி தலைவர் ஆண்ட்ரே கோஸ்லின், ஜப்பான் வங்கியின் ஆளுநர் ஹருஹிக்கோ குரோடா. படம்: WEF -

கொவிட்-19 தடுப்­பூசி அனை­வ­ருக்­கும் கிடைக்­கும் வரை உல­க­ளா­விய பொரு­ளி­யல் மீண்டு வரு­வது நிச்­ச­ய­மற்­ற­தாக இருக்­கும் என்று மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் தெரி­வித்­தார்.

இத­னால் சில சாத்­தி­யக்­கூ­று­க­ளுக்கு அர­சாங்­கங்­கள் தயா­ராக இருக்க வேண்­டும். அத்துடன் பின்­ன­டை­வு­களையும் எதிர்­கொள்­ளத் தயா­ராக இருக்க வேண்­டும் என்­றும் மிக­வும் பல­வீ­ன­மான நிலை­யில் இருப்­போ­ரைப் பாது­காக்க தேவை­யான கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும்.

கொவிட்-19 கார­ண­மாக கடந்த ஆண்­டில் நிச்­ச­ய­மற்ற சூழல் நில­வி­ய­தா­க­வும் பொரு­ளி­யல் நிலை­கு­லைந்து போகா­மல் இருக்­க­வும் பொது­மக்­கள் நம்­பிக்கை இழக்­கா­மல் இருக்­க­வும் நிதி தொடர்­பாக உலக நாடு­கள் அதற்கு முன்பு எடுக்­காத பல நட­வ­டிக்­கை­களை எடுத்­த­ன­ என்றும் ச­மூ­கக் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான தர்­மன் கூறினார்.

"உல­க­ளா­விய வளர்ச்சி, அல்­லது தேசிய அள­வி­லான வளர்ச்சி குறித்து யாரா­லும் முன்­னு­ரைக்க முடி­யாது. இதெல்­லாம் கொரோனா கிரு­மித்­தொற்று சூழ­லைப் பொருத்­தது," என்­றார் திரு தர்­மன்.

வளர்ந்து வரும் நாடு­களில் பெரும்­பா­லான மக்­க­ளி­டம் கொரோனா தடுப்­பூசி இன்­னும் சென்­ற­வ­டை­ய­வில்லை என்று தெரி­வித்த திரு தர்­மன், இதுவே நிச்­ச­ய­மற்ற நிலைக்கு முக்­கிய கார­ண­மாக இருக்­கிறது என்றார்.

குறிப்புச் சொற்கள்