வேறு வழி இல்லாத நிலையில் ஜிஎஸ்டி வரி உயர்வு அவசியம்

வீடாக இருந்­தா­லும் நாடாக இருந்­தா­லும் அள­வறிந்து செயல்­பட வேண்­டும். வீட்­டுக் கணக்­கைப் போலவே நாட்­டுக் கணக்கை­யும் திறம்­பட நிர்­வகித்து வரும் அணுகுமுறை தொடர்ந்­தால் சேமிப்பு மூலம் கையி­ருப்பு பல­மடையும். பொரு­ளி­யல் நல்ல காலத்­தின்­போது அந்­தக் கையிருப்­பைக் கூடு­மா­ன­வரை­ தொடா­மல் ஆடம்­ப­ரச் செல­வு­க­ளைக் குறைத்­துக்­கொண்டு சிக்­க­ன­மாக இருந்து மேலும் மேலும் பலப்­ப­டுத்தி வரு­வ­து­தான் விவே­க­மா­ன­ செயல்.

செல­வை­விட வரு­மா­னத்தைப் பெருக்கி, மிச்சப்­படும் தொகை­யைச் சேமித்து வருகின்ற ஒரு போக்கு, ஒரு நாட்­டின் வெற்­றிக்­கும் முன்­னேற்­றத்­துக்­கும் மக்­க­ளின் வளப்­பத்­துக்­கும் மிக முக்­கி­ய­மா­னது என்பதைச் சொல்­ல­வேண்­டி­ய­தில்லை. அது­வும் மக்­க­ளுக்­குப் பாதிப்போ சுமையோ இல்­லா­மல் இதைச் செய்­வது, மக்­கள் நல­னில் நாட்­ட­முள்ள, மிக­வும் திற­மை­யான, அதே வேளையில் கருணைமிக்க ஓர் அர­சாங்­கத்­தின் பொறுப்பு.

சிங்­கப்­பூர் இத்­த­கைய அணு­கு­முறை மூலம் இவ்­வ­ளவு காலம் வெற்­றி­க­ர­மான முறை­யில் முன்னேறி சேமிப்பை வலு­வாக்கி வந்­துள்­ளது. இருந்­தா­லும் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளா­கவே நாட்­டின் செல­வி­னம் அதிக கவ­னம் செலுத்த வேண்­டிய மிக முக்­கிய அம்­ச­மாக ஆகி­ இருக்கிறது. செல­வி­னங்­க­ளுக்­கான தேவை தாறு­மா­றாக கூடி வரு­கிறது. மக்­க­ளின் சுகா­தா­ரச் செல­வி­னம் கடந்த பத்து ஆண்­டு­களில் மூன்று மடங்­குக்­கும் அதி­க­மாகக் கூடி­விட்­டது. மக்­கள்தொகை மூப்­படை­வ­தால் இந்­தச் செல­வி­னம் தொடர்ந்து கணி­ச­மாக அதி­க­ரிக்கும் நிலையும் உள்ளது.

இதோடு, உள்கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்­கான தேவைகள், சமூ­கப் பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளுக்­குச் செலவு எல்­லாம் சேர்ந்து அர­சாங்­கம் அதி­க­மாக செல­வி­ட­வேண்­டிய தேவை­யைத் தொடர்ந்து ஏற்படுத்­திக் கொண்­டே­தான் இருக்­கும். இவற்றை எல்­லாம் கடன் வாங்கி செய்து முடித்­தால் அந்­தக் கடனை மக்­கள் சுமக்­க­வேண்­டிய நிலை­தான் வரும்.

இது ஒரு­பு­றம் இருக்க, கொவிட்-19 கார­ண­மாக நாட்டின் சுதந்­தி­ர வரலாற்றில் இல்­லா­த­படி படு­மோ­ச­ மான பொரு­ளியல் மந்­தம் ஏற்­பட்­டதால் அர­சாங்­கம் கையி­ருப்­பில் இருந்து சேமிப்பை எடுத்து சாதனை அள­வில் செல­விட்டு மக்­க­ளின் வேலை­க­ளைக் கட்­டிக்­காத்­த­தோடு புதிய வேலை­க­ளை­யும் உரு­வாக்­கி­யது. நிறு­வ­னங்­க­ளுக்கு உத­விக்கரம் நீட்டி, ஊழி­யர்­க­ளின் தேர்ச்­சி­க­ளைப் பெருக்கி எதிர்­காலத்­துக்கு அவர்­க­ளைத் தயார்­ப்ப­டுத்த பல்­வேறு செயல்­திட்­டங்­களை நடப்­புக்­குக் கொண்டு வந்­தது.

இவற்­றின் விளை­வாக 2020 நிதி­யாண்­டில் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் சாதனை அள­வாக 13.9% பற்­றாக்­குறை ஏற்­பட்­டு­விட்­டது. அந்­தப் பற்­றாக்­குறை 2021 நிதி­யாண்­டில் 2.2% ஆக இருக்­கும் என்­றும் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. நிதி அமைச்­சர் ஹெங் சுவீ கியட் ஒவ்­வோர் ஆண்­டும் தாம் தாக்­கல் செய்த வரவுசெல­வுத் திட்­டத்­தில் இவற்றை எல்­லாம் விளக்­கிச் சொல்லி செல­வி­னத்­தில்­தான் ஒரு­மித்த கவனம் செலுத்தி வந்­துள்­ளார். இந்நிலையில், அர­சாங்­கத்­துக்கு வரு­வா­யைக் கூட்ட என்ன வழி­ இருக்­கிறது என்று ஆராய்ந்­தால் அதில் பொரு­ளி­யல் வளர்ச்­சி­தான் மிக முக்­கி­ய­மா­ன­து. ஆனால் அது உலக நில­வரங்­க­ளைச் சார்ந்து இருக்­கிறது.

பொறுப்­புள்ள ஒரு நாடு மக்­களுக்­குச் சுமை கூடா­மல் தனக்கு வரு­வா­யைப் பெருக்­கு­வது என்­பது இலே­சான காரி­யம் அல்ல. அது­வும் உல­கப் பொரு­ளி­யல் அவ்­வ­ள­வாக சரி­யில்­லா­ம­லேயே இருந்து­வரும் நிலை­யில், இயற்கை வளங்­கள் இல்­லா­மல் வெளி வர்த்­த­கத்­தையே பெரி­தும் சார்ந்து இருக்­கும் பொரு­ளி­ய­லைக் கொண்ட சிங்­கப்­பூர் போன்ற நாடு­க­ளுக்கு அது இமா­லய சவா­லாக இருக்­கிறது.

அர­சுக்கு வரு­வாய் ஈட்­டித் தரு­வ­தில் வரி­வ­சூல் குறிப்­பி­டத்­தக்­கது. இருந்தாலும் மக்­களில் பெரு­ம் பாலானோர் தனி­ந­பர் வரு­மான வரி செலுத்­து­வ­தில்லை என்­ப­தால் அந்த வரி மூலம் கிடைக்­கும் வரு­வாய் பெரிய அள­வுக்கு இருக்­காது. நிறு­வ­னங்­களுக்கான வரியை, அவற்­றின் போட்­டித்­தி­றன் பாதிக்­கப்­படும் அள­வுக்கு உயர்த்­த­வும் முடி­யாது. இப்­போது நடப்­பில் இருக்­கும் சிங்­கப்­பூ­ரின் வரி­வ­ரு­வாய் ஏற்­பாடு செம்­மை­யான ஒன்று. சென்ற ஆண்­டைப் பார்க்­கை­யில், வசூ­லான வரியில் 56% சிங்­கப்­பூர் குடும்­பங்­களில் அதிக வரு­மா­னம் உள்ள முதல் 20 விழுக்­காட்­டி­னர் செலுத்­தி­ய­து. அவர்­கள் அர­சாங்­கத்­தி­டம் இருந்து பெற்ற நன்மை­கள் 11%. வசூ­லான மொத்த வரி­யில் 9%ஐ அடித்­தட்­டில் இருப்­போர் செலுத்­தி­னர். இவர்­கள் பெற்ற நன்­மை­கள் 27% ஆக இருந்­தது.

உல­கின் பல நாடு­க­ளைப் போலவே சிங்­கப்­பூர் மக்­கள் தாங்­கள் வாங்­கும் பொருட்­க­ளுக்­கும் பெறு­கின்ற சேவை­க­ளுக்­கும் ஜிஎஸ்டி எனப்­படும் பொருள் சேவை வரி­யைச் செலுத்தி வரு­கி­றார்­கள்.

‘பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு மற்­றும் மேம்­பாட்டு நிறு­வ­னம்’ என்ற உலக­ளா­விய அமைப்­பின் சரா­சரி ஜிஎஸ்டி வரி 19% என்­றா­லும்­கூட சிங்­கப்­பூ­ரில் இந்த வரியின் அளவு பல ஆண்­டு­கா­ல­மா­கவே 7% ஆகத்தான் இருந்து வரு­கிறது. அர­சாங்­கத்­தின் நடை­முறை வருவாயில் இப்­போது ஏறத்­தாழ 15%க்கு இந்த வரி பொறுப்பு வகிக்­கிறது. ஜிஎஸ்டி வரி ஏற்­பாடு எல்லா மக்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய பர­வ­லான ஒன்று என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

வரு­வா­யைப் பெருக்க வேண்­டிய இப்போதைய சூழ­லில், ஜிஎஸ்டி வரியை உயர்த்­து­வதே அர­சுக்கு மிக­வும் பொருத்­த­மான, தவிர்க்க இயலாததாக இருக்­கும் என்று கணிக்க முடி­கிறது.

இந்த வரியை 2021க்கும் 2025க்கும் இடை­யில் 9% ஆகக் கூட்ட வேண்டி இருக்­கும் என்று 2018 ஆம் ஆண்­டி­லேயே நிதி அமைச்­சர் கோடி­காட்­டி­னார். ஆனால் கொவிட்-19 கார­ண­மாக இந்த ஆண்டில் வரியை உயர்த்த முடி­ய­வில்லை.

வேறு வழி இன்றி இந்த வரியை உயர்த்தவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை நிதி அமைச்சர் இப்போது கோடிகாட்டி இருக்கிறார். இந்த ஆண்டில் 4% முதல் 6% வரை பொருளியல் வளரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அரசு முன்னுரைத்து இருக்கிறது.

இது கைகூடி வரும் நிலையில், அநேகமாக அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் ஜிஎஸ்டி உயர்வு இருக்கக்கூடும் என்று கணிக்க இடம் உண்டு.

வரி உயர்ந்தாலும் அதனால் பெரும்பாலான குடும்பங்களுக்கு ஏற்படக்கூடிய சுமையைக் குறைக்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு $6 பில்லியன் உத்திரவாதத் திட்டம் ஏற்கெனவே நடப்பில் உள்ளது.

வரி உயரும்போது அதற்கேற்ப உயர்த்தப்படும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகளும் ஜிஎஸ்டி சுமையை மேலும் குறைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!