மீண்டும் திரும்பும் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

கிரு­மித்­தொற்று சூழல் சீராகி வரும் நிலை­யில் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள் சங்­கம் (லி‌‌‌‌ஷா) நடத்­தும் இந்­திய புத்­தாண்டு, சித்­திரை விழா கொண்­டாட்­டங்­கள் மொத்­தம் 10 நிகழ்ச்­சி­க­ளு­டன் இவ்­வாண்டு திரும்­பு­கிறது.

கடந்த ஆண்டு தமிழ்ப் புத்­தாண்டு கால­கட்­டத்­தில் கிரு­மித் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் செயல்­பாட்­டில் இருந்­த­தி­னால் 2010ஆம் ஆண்­டி­லி­ருந்து நடக்­கும் இந்த விழா ரத்து செய்­யப்­ப­ட­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டது.

தமி­ழர், பெர­னக்­கான் இந்­தி­யர்­கள், இலங்­கைத் தமி­ழர், தெலுங்கு, சீக்­கி­யர் போன்ற 16 இந்­திய இன பிரி­வு­க­ளைச் சேர்ந்த பங்­கா­ளி­கள் கைகொ­டுக்­கும் இந்த விழா, இம்­மா­தம் 12ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை நடை­பெ­றும்.

“இந்த விழாவை ஒரு கடி­ன­மான கிரு­மித்­தொற்­றுச் சூழ­லில் ஏற்­பாடு செய்­கி­றோம்.

“சித்­தி­ரைப் புத்­தாண்டு விழாவை நிறைய மாற்­றங்க­ளு­டன் நடத்த ஏற்­பாட்­டுக் குழு தீவி­ர­மாக பல முயற்­சி­களை எடுக்­கிறது,” என்­றார் லி‌‌‌ஷா­வின் தலை­வர் திரு சி. சங்­க­ர­நா­தன்.

ஏப்­ரல் 12 முதல் 16ஆம் தேதி வரை பிஜிபி மண்­ட­பத்­தில் நடக்­கும் சிறப்­புக் கண்­காட்சி இவ்­வாண்டு விழா­வில் ஒரு முக்­கிய அம்­சம்.

மூன்று முக்­கிய பிரி­வு­களும் நான்கு நேரடி நட­வ­டிக்­கை­களும் கொண்ட இந்­தக் கண்­காட்சி, பல­வித இந்­தி­யர்­க­ளின் கலா­சா­ரம், கொண்­டாட்ட முறை­கள், வர­லாறு ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கும்.

காலை 10 முதல் நண்­ப­கல் 12 மணி, மாலை 5 முதல் 6 மணி வரை ஆகிய இரண்டு கால நேரங்­களில் பொது­மக்­க­ளுக்­குக் கண்­காட்சி திறக்­கப்­படும்.

பிற்­ப­கல் 2 முதல் மாலை 5 மணி வரை மாண­வர்­கள் வர­லாம்.

விழா­வின் அதி­கா­ர­பூர்வ திறப்பு விழா ஏப்­ரல் 14ஆம் தேதி நடை­பெ­றும்.

சிறப்பு விருந்­தி­ன­ராக பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா கலந்­து­கொள்­வார்.

‘அதி­பர் சவால்’ என்ற நன்­கொ­டைத் திரட்டு முயற்­சி­யில் திரட்­டப்­படும் நன்­கொ­டை­களை அதி­ப­ரின் சார்­பாக அமைச்­சர் இந்­தி­ராணி அந்த நிகழ்ச்­சி­யில் பெற்­றுக்­கொள்­வார்.

மறு­நாள் 15ஆம் தேதி அன்று தமிழ்­மொழி விழாவை ஒட்டி சித்­தி­ரைப் புத்­தாண்டு விழா நடத்­தப்­ப­டு­கிறது. கவி­ஞர் வாலி­யின் படைப்­பு­களை மைய­மா­கக் கொண்டு இவ்­விழா நடக்­கும்.

‘ஷியோக் சுவை’ என்ற ஐந்து வித உண­வ­கங்­கள் நடத்­தும் உண­வைச் சுவைக்­கும் நிகழ்ச்சி, புதை­யல் வேட்டை, மாம்­பழ விழா, அட்­சய திரு­தியை போன்ற மற்ற நிகழ்ச்­சி­களும் நடத்­தப்­படும்.

இதற்­கி­டையே விழாவை ஒட்டி திரு­வள்­ளு­வர், திருக்­கு­றள்­கள் சார்ந்த பதா­கை­கள் சிராங்­கூன் சாலையை அலங்­க­ரிக்­கும்.

சாலை விளக்­கு­களில் இந்­திய அலங்­கா­ரங்­களும் அமைக்­கப்­படும் என்று ஏற்­பாட்­டுக் குழு தெரி

­வித்­தது.

இவ்­வாண்டு விழா­வில் பங்­கேற்­கும் அனைத்­துக் கலை­ஞர்­களும் போட்­டிக்­கான நிதி­ப­தி­களும் உள்­ளூ­ரைச் சேர்ந்­த­வர்­கள் என்று சுட்­டி­னார் லி‌‌‌ஷா­வின் துணைச் செய­லா­ளர் திரு மு.பிர­கா‌ஷ்.

“21 ஆண்­டு­க­ளாக இயங்­கும் லி‌‌‌ஷா அமைப்பு ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­களை நிகழ்ச்­சி­களில் ஈடு

படுத்­தி­யுள்­ளது.

“லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தைத் துடிப்­பாக வைத்­தி­ருக்­க­வும் சமூ­கத்தை ஒன்­றி­ணைக்­க­வும் இந்த நிகழ்­வு­களை நடத்­து­கி­றோம். இந்த விழா லி‌‌‌ஷா­விற்­கும் சமூ­கப் பங்­கா­ளி­க­ளுக்­கும் முக்­கி­யம்,” என்­றார் லி‌‌‌ஷா­வின் ஆலோ­ச­கர் திரு ராஜ­கு­மார் சந்­திரா.

இணை­யம் மூல­மா­க­வும் நேரடி யாக­வும் இந்­நி­கழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­ள­லாம்.

நேர­டி­யாக நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்ள மக்­கள் முன்­கூட்­டியே பதிவு செய்­வது அவ­சி­யம் என்­றும் முத­லில் பதிவு செய்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்­றும் ஏற்­பாட்­டுக் குழு வலி­யு­றுத்­தி­யது.

பதிவு செய்­ய­வும் விழா குறித்த முழு விவ­ரங்­க­ளுக்­கும் www.littleindia.com.sg/ என்ற இணை­யத்­த­ளத்தை நாட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!