அறப்பணி இணையத்தளம் குறித்து கருத்து தெரிவிக்க அழைப்பு

அறப்­பணி இணை­யத்­த­ளத்­தில் எத்­த­கைய தக­வல்­கள் இடம்­பெற வேண்­டும் என்­பது குறித்து கருத்து தெரி­விக்க, சிங்­கப்­பூ­ரின் நன்­கொடை அமைப்­பு­க­ளுக்­கும் பொது­மக்­க­ளுக்­கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

நன்­கொ­டை­யா­ளர்­கள், அற­நிறு­வ­னத்­தார் போன்­றோர் நன்­கொடை வழங்­கும்­போது அவர்­களுக்­குச் சரி­யான தக­வல்­கள் தெரி­விக்­கப்­பட்­டதை இது உறு­தி­செய்­யும் என்று கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் நேற்று கூறி­னார்.

சிங்­கப்­பூர் அர­சாங்க அமைப்­பின் இணை­யத்­த­ள­மாக இது செயல்­படும். நன்­கொடை அமைப்பு­களுக்­காக வளங்­க­ளை ஒருங்­கிணைப்­ப­து­டன் அந்த அமைப்­பு­களின் வரு­டாந்­திர அறிக்­கை­கள், நிதித் தக­வல்­கள் போன்­ற­வற்றை மக்­கள் அறிந்­தி­ட­வும் இத்தளம் அனு­ம­திக்கும்.

அறப்­பணி இணை­யத்­த­ளத்­தில் அற­நி­று­வ­னங்­க­ளுக்கு உரி­மை­யான பக்­கங்­களில் அவற்­றின் அடிப்­படைத் தக­வல்­கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கும் என்று கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்சு கடந்த ஆண்டு தெரி­வித்­தது. இது அறப்­பணிப் பிரி­வின் வெளிப்­ப­டைத்­தன்­மையை மேம்­ப­டுத்­து­வ­து­டன் பொது­மக்­கள் கொண்­டுள்ள நம்­பிக்­கை­யை­யும் அதி­கப்­ப­டுத்­தும் என்று கூறப்­பட்­டது.

அறப்­பணி ஆளுமை மாநாட்­டில் கலந்­து­கொண்­ட­போது திரு டோங் இத்­த­க­வல்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டார். நிகழ்­வில் கிட்­டத்­தட்ட 700 பங்­கேற்­பா­ளர்­கள் இணை­யம்­வழி இணைந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!