சந்தேக நபருக்கு அடி, உதை; அதிகாரி குற்றவாளி எனத் தீர்ப்பு

குற்­றத்தை ஒப்­புக்­கொள்­ளச் சொல்லி சந்­தேக நபரை மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­காரி வெங்­க­டேஷ் ராஜ் நைனார் நாக­ரா­ஜன் (படம்) அடித்­துத் துன்­பு­றுத்­தி­ய­தாக நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. இது­தொ­டர்­பாக நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யில் வெங்­க­டேஷ் குற்­ற­வாளி எனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

2019ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதத்­தி­லி­ருந்து வெங்­க­டேஷ் பணி இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டி­ யில் மலே­சி­ய­ரான சிவ­பா­லன் கன்­னி­யப்­ப­னி­டம் போதைப்­பொ­ருள் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து, குற்­றத்தை ஒப்­புக்­கொள்­ளச் சொல்லி வெங்­க­டேஷ் அவரை அடித்­துத் துன்­பு­றுத்­தி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

போதைப்­பொ­ருள் தொடர்­பான குற்­றத்­தில் ஈடு­பட்ட சிவ­பா­ல­னுக்கு 15 ஆண்டு சிறைத் தண்­ட­னை­யும் 13 பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன.

2017ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 2ஆம் தேதி­யன்று பிற்­ப­கல் 3.40 மணி அள­வில் உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வடி வழி­யாக சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைந்த சிவ­பா­லனை தடுத்து நிறுத்தி அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­தி­னர். சிவ­பா­லன் ஓட்­டிய மோட்­டார் சைக்­கி­ளின்

பெட்­டிக்­குள் இருந்த நீல பொட்­ட­லத்­தில் போதைப்­பொ­ருள் இருந்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­பட்­டது.

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வின் உட்­லண்ட்ஸ் குழு­வி­டம் சிவ­பா­லன் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார். தமது மோட்­டார் சைக்­கிள் பெட்­டிக்­குள் போதைப்­பொ­ருள் இருப்­பது தமக்­குத் தெரி­யாது என்­றும் தமது நண்­ப­ரி­டம் தமது மோட்­டார் சைக்­கி­ளைக் கொடுத்­தி­ருந்­த­தா­க­வும் சிவ­பா­லன் வாக்­கு­மூ­லம் தந்­தார்.

சிவ­பா­ல­னி­டம் தமி­ழில் விசா­ரணை நடத்த வெங்­க­டேஷ் நிய­மிக்­கப்­பட்­டார். விசா­ரணை நடத்­தி­ய­போது வெங்­க­டேஷ் மீது மது வாடை அடித்­த­தாக சிவ­பா­லன் கூறி­னார். இரு­வ­ரும் கழி­வ­றைக்­குச் சென்­ற­தா­க­வும் அங்கு சிவ­பா­ல­னி­டம் வெங்­க­டேஷ் பேசத் தொடங்­கி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

சிவ­பா­ல­னி­டம் வெங்­க­டேஷ் முத­லில் கனி­வு­டன் பேசி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் போதைப்­பொ­ருள் வைத்­தி­ருந்­தது தொடர்­பாக சிவ­பா­லன் தொடர்ந்து மறுப்பு தெரி­வித்ததை அடுத்து, வெங்க­டேஷ் மூர்க்­கத்­த­ன­மாக நடந்துகொண்­ட­தாக அர­சாங்க வழக்­க­றி­ஞர்­கள் தெரி­வித்­த­னர்.

வெங்­க­டேஷ் அடித்­துத் துன்

­பு­றுத்­தி­ய­தில் சிவ­பா­லன் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். இவ்­வாறு சிவ­பா­லனை வெங்­க­டேஷ் மூன்று முறை அடித்­துத் துன்­பு­றுத்­தி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

சிவ­பா­லனை மருத்­து­வர் பரி­சோ­தித்­துப் பார்த்­த­போது அவ­ருக்கு ஏற்­பட்ட கொடுமை வெளிச்­சத்­துக்கு வந்­தது.

இந்­நி­லை­யில், சிவ­பா­ல­னி­டம் கடு­மை­யாக நடந்­து­கொண்­ட­

போ­தி­லும் அவரை வெங்­க­டேஷ் அடிக்­க­வில்லை என்று அவ­ரது வழக்­க­றி­ஞர்­கள் தெரி­வித்­த­னர். வெங்­க­டே­ஷுக்கு எதி­ராக அடுத்த மாதம் தீர்ப்­ப­ளிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வெங்­க­டேஷ் மீதான மேலும் மூன்று குற்­றச்­சாட்­டு­கள் நிலு­வை­யில் உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!