அறநிதிக்கு $13,000 திரட்டிய ‘எஸ்டி என்ஜினியரிங்’ நிறுவனம்

'எஸ்டி என்­ஜி­னி­ய­ரிங்' நிறு­வ­னம், குறைந்த வரு­வாய் ஈட்­டும் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்­கான 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைச்­செ­லவு' அற­நி­திக்­காக 13,000 வெள்­ளி­யைத் திரட்டி உள்­ளது.

ஊழி­யர்­க­ளுக்கு டி-சட்­டையை வழங்கி இந்த அற­நி­திக்கு நன்­கொடை வழங்­கும்­படி கேட்­டுக்­கொண்­ட­தாக நிறு­வ­னம் கூறி­யது.

சென்ற மாதம் 13, 14 ஆகிய தேதி­களில் இந்த நன்­கொ­டைத் திரட்டு நடத்­தப்­பட்­டது. ஜூலை 15ஆம் தேதி தொடங்­கிய ஊழி­யர்­க­ளின் உடல்­ந­லத்தை மேம்­படுத்­தும் 'எஸ்டி என்­ஜி­னி­ய­ரிங்' இயக்­கத்தை ஒட்டி இவ்­வாறு நன்­கொடை திரட்­டப்­பட்­டது.

நான்கு வாரங்­க­ளுக்கு இடம்­பெற்ற இந்த இயக்­கத்­தின்­கீழ், 5,000 டி-சட்­டை­கள் ஊழி­யர்­களுக்கு வழங்­கப்­பட்­டன.

மூன்று வடி­வங்­களில் அமைந்­தி­ருந்த இந்த டி-சட்­டை­களில், நற்­செ­யல்­களில் ஈடு­ப­டும்­ப­டி­யும் ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­முறையைப் பின்­பற்­றும்­ப­டி­யும் ஊழி­யர்­களை ஊக்­கு­விக்­கும் வகை­யில் வாச­கங்­கள் அச்­சி­டப்­பட்­டு இருந்­தன.

முன்­ன­தாக, இந்த ஆண்­டுத் தொடக்­கத்­தில், மறு­முறை பயன்­ப­டுத்­தக்­கூ­டிய முகக்­க­வ­சங்­க­ளின் விற்­பனை மூலம் 'எஸ்டி என்­ஜி­னி­ய­ரிங்' நிறு­வ­னம் 108,000 வெள்­ளி­யைத் திரட்டி 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைச்­செ­லவு' அற­நி­திக்கு நன்­கொ­டை­யாக வழங்­கி­யது.

2000ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட இந்த அற­நி­தி­யின் மூலம் இது­வரை, குறைந்த வரு­வாய் ஈட்­டும் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 200,000க்கும் மேற்­பட்ட சிறு­வர்­கள் பல­ன­டைந்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!