ஓரே ஓட்டத்தில் வீழ்ந்த டெல்லி

புதுடெல்லி: தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 82 ஓட்டங்களை விளாசியபோதும் அது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. ஃபெரோஸ் ஷா கோட்லா விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணி டெல்லி அணியை ஒரெயொரு ஓட்டத்தில் தோற்கடித்தது. முதலில் பந்தடித்த குஜராத் அணிக்கு அபாரமான தொடக்கம் தந்தது டுவைன் ஸ்மித் (53) = பிரெண்டன் மெக்கல்லம் (60) இணை. கடைசியாக வந்த ஜேம்ஸ் ஃபால்க்னர் 13 பந்துகளில் 22 ஓட்டங்களை விளாச, அந்த அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைச் சேர்த்தது.

அடுத்து ஆடிய டெல்லி அணி 57 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தபோதும் அடுத்து இணைந்த டூமினியும் மோரிசும் அணியின் சரிவைத் தடுத்தனர். டூமினி 48 ஓட்டங்களில் வெளியேற, கடைசி இரு ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 18 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இந்நிலையில், 19வது ஓவரில் நான்கு ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார் பிரவீண் குமார். இன்னிங்சின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் வெற்றி என்ற நிலையில் மோரிஸ் இரண்டு ஓட்டங்களை மட்டுமே எடுக்க, டெல்லி அணியால் தோல்வியின் பிடியிலிருந்து தப்ப முடியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!