வாகை சூடிய இங்கிலாந்து

லண்டன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி யது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இந்நிலையில், இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பந்தடித்த இங்கி லாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 498 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மொயீன் அலி ஆட்டம் இழக்காமல் 155 ஓட்டங்கள் குவித் தார். முதல் இன்னிங்சில் 101 ஓட்டங்களில் சுருண்டு ‘ஃபாலோ - ஆன்’ ஆகி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 309 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. சண்டிமால் 54 ஓட்டங்களுடனும் ஸ்ரீவர்தனா 35 ஓட்டங்களுடனும் நிலைத்து இருந்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இபிஎல் ஆட்டமொன்றில் செல்சி குழுவின் கோலை 67வது நிமிடத்தில் சமன் செய்தார் லெஸ்டர் சிட்டி குழுவின் இன்டிடி (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி

20 Aug 2019

செல்சியின் முதல் வெற்றிக்கு தடையான லெஸ்டர்