ஸ்டோக் சிட்டி வெற்றி

ஸ்டோக் ஆன் டிரென்ட் (பிரிட்டன்): பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டமொன்றில் சுவான்சீயும் ஸ்டோக் சிட்டியும் மோதின. இந்த ஆட்டத்தில் தனது மூன்றாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்தது ஸ்டோக் சிட்டி. முன்னாள் சுவான்சீ ஆட்டக் காரரும் தற்போதைய ஸ்டோக் வீரருமான வில்ஃபர்ட் போனி மூன்றாவது நிமிடத்தில் தனது குழுவின் கோல் எண்ணிகையைத் தொடங்கி வைத்தார். அதை எட்டாவது நிமிடத் திலேயே பதில் கோல் போட்டு சமன் செய்தது சுவான்சீ.

எனவே முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. ரமடன் ஷோபி கடத்திய பந்தை சுவான்சீ வீரர் அல்ஃபி மாசன் சொந்த கோல் வலைக்குள் புகுத்தியதால் 2-1 என முன்னிலை பெற்றது ஸ்டோக் சிட்டி. அதன்பிறகு, ஜோ அலனின் கோல் போடும் முயற்சி தடுக்கப் பட்ட நிலையில், 73வது நிமிடத்தில் போனி தனது இரண்டாவது கோலைப் போட்டார். அதன்பிறகு இரு அணிகளும் கோல் எதுவும் போடாதநிலையில், 3-1 என ஸ்டோக் வெற்றி பெற்றது.

இப்பருவத்தின் தொடக்கத்தில் பட்டியலில் பின்தங்கிய நிலையில் இருந்த ஸ்டோக் சிட்டி தனது சிறப்பான ஆட்டத்தால், தற்போது பிரிமியர் லீக் பட்டியலில் 12வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், சுவான்சீ இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களில் ஒரு வெற்றியைக்கூட பெறவில்லை. எனவே, ஐந்து புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள அக்குழு, பட்டியலில் கீழ் நிலையில் இருந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!