எனக்குத் தகுதி இல்லாமல் இருக்கலாம் - கார்டியோலா

மான்செஸ்டர்: மான்செஸ்டர் சிட்டி யை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்லும் தகுதி தமக்கு இல்லாமல் இருக்கலாம் என்று அதன் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித் துள்ளார். சிட்டி களமிறங்கிய கடந்த எட்டு ஆட்டங்களில் நான்கு ஆட்டங்களில் அது தோல்வி களைத் தழுவியது. இதனால் இப்பருவத்துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டம் சிட்டிக்குக் கிடைக்காது என்று கார்டியோலா தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிட்டியின் தோல் விகளுக்கு அதன் ஆட்டக்காரர் களை அக்குழுவின் ரசிகர்கள் குறைகூறத் தொடங்கினர்.

தமது ஆட்டக்காரர்களைத் தற்காத்துப் பேசிய கார்டியோலா, சிட்டி பட்டம் வெல்லாததற்குத் தாம் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். "எனது நிர்வாகத் திறனுக்கு சிட்டியின் ஆட்டக்காரர்கள் தகுதி அற்றவர்கள் என்று ரசிகர்கள் கூறுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டக் காரர்கள். "அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையை ரசிகர் கள் கொடுக்கவில்லை. "நான் சிட்டியின் நிர்வாகி யாகப் பொறுப்பேற்றதும் திண்ண மாகப் பட்டம் வெல்வோம் என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்து விட்டார்கள் போல் எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை நான் அவர்களது எதிர்பார்ப்புக்குத் தகுதியற்ற வனாக இருக்கலாம்," என்று செய்தியாளர்களிடம் கார்டி யோலா தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!