அஸ்லாம் ‌‌‌‌‌ஷா ஹாக்கி போட்டியில் இந்தியா தோல்வி

ஈப்போ: மலேசியாவில் நடைபெறும் 26 வது அஸ்லான் ‌‌‌ஷா ஹாக்கி போட்டி, மலேசியாவின் ஈப்போ நகரில்  நடந்து வருகிறது. இதில் நடப்பு வெற்றியாளர் ஆஸ்திரேலியா, இந்தியா, மலேசியா, இங்கிலாந்து, ஜப்பான்,  நியூசிலாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, உலக வெற்றியாளர் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் இந்தியா 1-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.