நிதானமாகப் பந்தடிக்கும் தென்னாப்பிரிக்கா

போர்ட் எலிசபெத்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 243 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங் களை எடுத்திருந்த தென்னாப் பிரிக்க அணி, நேற்று இரண்டாவது நாளில் நிதானமாக ஆடி ஓட்டங் களைக் குவித்தது. அந்த அணி இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின்போது இரண்டு விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை எடுத்திருந்தது.

எட்டு விக்கெட்டுகள் மீதம் இருந்த நிலையில் முதல் இன்னிங் சில் அதிக முன்னிலை பெற்று, ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி தரும் முனைப்புடன் அந்த அணி விளையாடி வந்தது.

இவ்விரு அணிகளுக்கு இடை யிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 118 ஓட்டங் களில் வென்றிருந்தது. இதற்கிடையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப் பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் அனைத் துலக கிரிக்கெட் மன்றம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக் கும் எனத் தெரிகிறது. ரபாடாவுக்கு சில ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கப்படலாம்.

அதேபோல, ஆஸ்திரேலிய அணியின் துணைத் தலைவர் டேவிட் வார்னருடன் மோதலில் ஈடுபட்ட தென்னாப்பிரிக்க விக் கெட் காப்பாளர் குவின்டன் டி காக்குக்குஅபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி யின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது வார்னரின் மனைவி பற்றி டி காக் இழிவாகப் பேசியதால் சண்டை வளர்ந்தது.

திடலில் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள தென்னாப்பிரிக்க இளம் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா (வலது), இம்முறை ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்தபின் அவரை நோக்கி பலமுறை கத்தியதோடு, இடிக்கவும் செய்ததால் அடுத்த சில ஆட்டங்களில் விளையாட ஐசிசி அவருக்குத் தடை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!