லிவர்பூல் வெற்றி; செல்சிக்குப் பின்னடைவு

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் ஃபுல்ஹம் குழுவை 2=1 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் லிவர்பூல் மீண்டும் முன்னிலை வகிக் கிறது.
ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் லிவர்பூலை முன்னி லைக்குக் கொண்டு சென்றார் சாடியோ மானே.
இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் முன்னிலை வகித்தது.
அடுத்த பருவத்தில் இரண் டாம் நிலை லீக்குக்குத் தள்ளப் படும் ஆபத்தை எதிர்நோக்கும் ஃபுல்ஹம், ஆட்டத்தைச் சமன் செய்யும் முனைப்புடன் பிற்பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.
ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் லிவர்பூலின் தற் காப்பில் ஏற்பட்ட குழப்பத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்தி ஃபுல்ஹம்மின் பேபல் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார்.
ஃபுல்ஹம் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்க, லீக் பட்டியலின் முதல் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு நழுவி
விட்டதோ என்ற கவலையில் லிவர்பூல் ரசிகர்கள் வாடிய முகங்களுடன் இருந்தனர்.
இந்நிலையில், ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் லிவர்பூலின் சாடியோ மானேவைக் கீழே விழச் செய்தார் ஃபுல்ஹம் கோல்காப்பாளர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், இளம் ஆல்ரவுண்டர் சேம் கரன் என இருவரை ஒரே ஓவரில் வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய நேப்பாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லமிசானேவை (இடது) பாராட்டி மகிழும் டெல்லி அணித்தலைவர் ஷ்ரேயாஸ். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

பழிதீர்க்கப்பட்ட பஞ்சாப்

இன்னும் ஐந்து ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே இந்தப் பருவத்தின் இத்தாலிய லீக் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் யுவென்டஸ் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள் (இடமிருந்து) யுவான் குவட்ரடோ, பிளேஸ் மட்விடி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, எம்ரி கேன். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

ரொனால்டோ வரலாற்றுச் சாதனை