டென்னிஸ்: ஆடுகளத்தைச் சேதப்படுத்தியதாக செரீனா வில்லியம்சுக்கு $13,500 அபராதம்  

 லண்டன்: விம்பிள்டன் டென்­னிஸ் போட்டியின்போது ஆடு­களத்தைச் சேதப்படுத்தியதாக அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்­சுக்கு 10,000 அமெரிக்க டாலர் (S$13,500) அபராதம் விதிக்­கப்­பட்டுள்ளது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டி­களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடை­பெற்று வருகிறது.

இதில், ஏழு முறை விம்பிள்டன் வெற்றியாளர் பட்டம் பெற்ற மூத்த வீராங்­கனை­யான செரீனா வில்லி­ யம்ஸ், காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

முன்னதாக பயிற்சி போட்டியின் போது ஆடு­களத்தை அவர் சேதப்­படுத்தி­ய­தாகப் புகார் எழுந்தது. 

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட ‘ஆல் இங்கி­லாந்து கிளப்’ அமைப்பானது, செரீனா வில்லியம்சின் கோபச் செயலுக்­காக அவருக்கு அப­ராதம் விதிக்க முடிவெடுத்தது. ஆட்டங்களின் போது அடிக்கடி கோபத்தை வெளிப்படுத்துபவர் செரீனா.

இந்நிலையில், மற்றோர் ஆட்டத்­தில் தோல்வியுற்ற பின்னர் செய்தி­ யாளர்களிடம் பேசிய இத்தாலிய வீரர் ஃபேபியோ ஃபோக்னினி, விம்பிள்டன் தொட­ரில் “குண்டு­வெடிக்க வேண்டும்” என்று ஆவே­ சமாகக் கூறியதால் அவருக்கு 3,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்