போராடி வென்றது ஸ்பர்ஸ்

லண்டன்: எஃப்ஏ கிண்ணக் காற்பந்தின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் கடும் போராட்டத்திற்குப் பின் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு 2-1 என்ற கோல் கணக்கில் மிடல்ஸ்பரோவை வீழ்த்தியது.

ஆட்டத்தின் இரண்டாம் நிமிடத்தில் கியோவானி லோ செல்சோவும் 15ஆம் நிமிடத்தில் எரிக் லமேலாவும் கோலடித்து ஸ்பர்ஸ் குழுவிற்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். 

எட்டு முறை எஃப்ஏ கிண்ணம் வென்றுள்ள ஸ்பர்ஸ் குழு, இம்மாதம் 25ஆம் தேதி நடக்கவுள்ள நான்காம் சுற்று ஆட்டத்தில் சௌத்ஹேம்டன் குழுவை எதிர்த்தாடவிருக்கிறது.