சானியா மிர்சா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்

கான்பரா: ஹோபர்ட் அனைத்துலக டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்தப் போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.

பெண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உக்ரேன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்து விளையாடிய சானியா மிர்சா (வயது 33), ஒக்சனா கலாஷ்னிகோவா (ஜார்ஜியா)- மியூ கட்டோ (ஜப்பான்) இணையைத் தோற்கடித்துக் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதையடுத்து காலிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே இணையை சானியா இணை நேற்று எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 6-2, 4-6, 10-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதிப் போட்டியில், ஸ்லோவேனியா - செக் குடியரசு ஜோடி தமரா ஜிதான்செக் மற்றும் மேரி பவுஸ்கோவாவை சானியா மிர்சா இணை சந்திக்க உள்ளது.

முதல் சுற்றின் வெற்றிக்குப் பிறகு, சானியா மிர்சா தனது மகன் இஜானுடன் இருக்கும் படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!