கங்குலி: கொரோனா சிகிச்சைக்காக வீரர்களின் அறையை வழங்கத் தயார்

கங்குலி: கொரோனா சிகிச்சைக்காக வீரர்களின் அறையை வழங்கத் தயார்

1 mins read
c2401bd4-ce6a-44e3-b525-888cb86c0a54
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிக்சை அளிக்க இடம் தேவை என்­றால் ஈடன் கார்­டன் மைதா­னத்­தில் வீரர்­கள் தங்­கு­வ­தற்­காக கட்­டப்­பட்­டுள்ள அறை­களை வழங்­கத் தயா­ராக இருக்­கி­றோம் என பிசி­சிஐ தலை­வர் சவு­ரவ் கங்­குலி தெரி­வித்­துள்­ளார். கோப்புப்படம் -

மும்பை: கொரோனா கிருமி தாக்­கம் இந்­தி­யா­வில் அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது. தற்­போது வரை இந்­தியா முழு­வ­தும் இந்த கிருமித் தொற்றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை பன்­ம­டங்­கா­கப் பெரு­கிக்­கொண்­டுள்­ளது. இன்­னும் அதி­க­ரிக்­கும் என அஞ்­சப்­ப­டு­வ­தால் ஒவ்­வொரு மாநில அர­சு பாதிக்­கப்­பட்­ட­வர்­களை தனி­மைப்­ப­டுத்தி சிகிச்சை அளிப்­ப­தற்கு ஏற்ற வகை­யில் படுக்­கை­களை அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது.

மேற்கு வங்­கா­ளத்­தி­லும் கொரோனா கிருமி தொற்றி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. ஒரு­வேளை சிகிக்சை அளிக்க இடம் தேவை என்­றால் ஈடன் கார்­டன் மைதா­னத்­தில் வீரர்­கள் தங்­கு­வ­தற்­காக கட்­டப்­பட்­டுள்ள அறை­களை வழங்­கத் தயா­ராக இருக்­கி­றோம் என பிசி­சிஐ தலை­வர் சவு­ரவ் கங்­குலி தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து அவர் கூறு­கை­யில் "அரசு எங்­க­ளி­டம் கேட்­டால், நாங்­கள் கொடுப்­ப­தற்­காக தயா­ராக உள்­ளோம். இந்த நேரத்­தில் இருந்து எது தேவை­யென்­றா­லும் அதைச் செய்ய இருக்­கி­றோம். இதில் எந்­த­வித பிரச்­சினை­யும் இல்லை," என்­றார். சவு­ரவ் கங்­குலி பிசி­சிஐ தலை­வ­ரா­கப் பதவி ஏற்­ப­தற்கு முன் பெங்­கால் கிரிக்­கெட் சங்­கத்­தின் தலை­வ­ராக இருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஏற்­கெனவே புதுச்­சேரி மாநில கிரிக்­கெட் சங்­கம் இது­போன்ற அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.