பிரெஞ்சுக் காற்பந்துக் குழுவிலிருந்து மெஸ்ஸி விரைவில் விடைபெறலாம்

பாரிஸ்: உல­கின் முன்­ன­ணிக் காற்­பந்து ஆட்­டக்­கா­ர­ரான அர்­ஜென்­டி­னா­வின் லய­னல் மெஸ்ஸி (படம்) வரும் ஜூன் மாதத்­து­டன் பிரான்­சின் பாரிஸ் செயின்ட் ஜெர்­மேன் (பிஎஸ்ஜி) குழு­வி­லி­ருந்து வெளி­யே­ற­லாம் எனத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

அடுத்த மாதம் 36 வயதை எட்­டும் மெஸ்ஸி, சவூதி அரே­பி­யா­வைச் சேர்ந்த ஒரு குழு­வு­டன் பெரும் தொகைக்கு ஒப்­பந்­தம் செய்­து­கொண்­டுள்­ள­தாக அண்­மை­யில் ஏஎ­ஃப்பி நிறு­வ­னம் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

“மெஸ்­ஸி­யு­ட­னான ஒப்­பந்­தம் முடி­வா­கி­விட்­டது. மெஸ்ஸி அடுத்த பரு­வத்­தில் சவூ­தி­யில் விளை­யா­டு­வார்,” என்று பெயர் கூற விரும்­பாத ஒரு­வரைச் சுட்டி, அச்­செய்தி குறிப்­பிட்­டு இருந்­தது.

பிஎஸ்ஜி குழு இன்­னும் அதனை உறு­திப்­ப­டுத்­த­வில்லை. ஆனால், பிஎஸ்­ஜி­ உட­னான மெஸ்­ஸி­யின் பய­ணம் ஜூன் மாதத்­து­டன் முடி­விற்கு வர­வுள்­ள­தா­கத் தெரி­கிறது.

“மெஸ்­ஸி­யின் ஒப்­பந்­தத்தை பிஎஸ்ஜி நீட்­டிக்க விரும்­பி­னால் அது முன்­ன­தா­கவே நடந்­தி­ருக்­கும்,” என்று அக்­குழு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

அடுத்த பரு­வத்­தில் மெஸ்ஸி எந்­தக் குழு­விற்­காக விளை­யா­ட­வுள்­ளார் என்­பதை இன்­னும் அவர் முடி­வு­செய்ய­வில்லை என்று அவ­ரின் தந்­தை­யும் முக­வ­ரும் கூறி­யுள்­ள­னர்.

இத­னி­டையே, சவூதி சென்­ற­தற்­காக இருவாரங்களுக்கு இடை­நீக்­கம் செய்­யப்­பட்ட மெஸ்ஸி, இன்று அஜக்­சியோ குழு­விற்­கெ­தி­ரான பிரெஞ்சு லீக் ஆட்­டத்­தில் கள­மி­றங்­கு­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!