புதிய பொறுப்பில் பிரகாசித்த இங்கிலாந்துக் காற்பந்து வீரர்

எம்­டினா: யூரோ 2024 காற்­பந்து தகு­திச் சுற்று ஆட்­ட­மொன்­றில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை மால்­டா­வைச் சந்­தித்த இங்­கி­லாந்து அதை 4-0 என்ற கோல் கணக்­கில் தோற்­க­டித்­தது.

அந்த ஆட்­டத்­தில் மத்­திய திடல் பொறுப்­பில் மிகச் சிறப்­பாக ஆடிய ட்ரண்ட் அலெக்­சாண்­டர்-ஆர்­னால்டை அந்­தப் பொறுப்­பில் நிரந்­த­ர­மாக விளை­யாட வைக்க தான் எண்­ணி­யி­ருப்­ப­தாக இங்­கி­லாந்து குழு நிர்­வாகி கேரத் சவுத்­கேட் கூறி­யுள்­ளார்.

24 வயது அலெக்­சாண்­டர்-ஆர்­னால்ட், கடந்த சில மாதங்­க­ளாக லிவர்­பூல் குழு­வில் மத்­திய திடல் ஆட்­டக்­கா­ர­ராக சிறப்­பாக ஆடி வந்­த­தால், அதே பொறுப்­பில் ஆட­வைத்து சோதிக்க, நிர்­வாகி கேரத் முடி­வெ­டுத்­தார். அவ­ரது சோதனை வெற்­றி­ய­ளித்­தது. அலெக்­சாண்­டர்-ஆர்­னால்ட் சிறப்­பாக ஆடி, ஒரு கோல் போட்­ட­து­டன் மேலும் இரண்டு கோல் கள் போடப்­ப­டு­வ­தற்கு உத­வி­னார்.

இயல்­பாக, தற்­காப்பு ஆட்­டக்­கா­ர­ராக விளை­யா­டும் அலெக்­சாண்­டர்-ஆர்­னால்ட், 2018ல் தேசிய குழு­வில் இடம்­பெற்­ற­தி­லி­ருந்து 19 முறை­தான் அதற்­காக விளை­யா­டி­யுள்­ளார். தற்­காப்பு நிலை­யில் ஆட, ரீஸ் ஜேம்ஸ், கைல் வாக்­கர் அல்­லது கீரன் டிரிப்­பி­யர் ஆகி­யோரை நிர்­வாகி கேரத் தேர்வு செய்து வந்­துள்­ளார்.

இங்­கி­லாந்­துக்­காக அலெக்­சாண்­டர்-ஆர்­னால்ட், ஹேரி கேன், காலும் வில்­சன் ஆகி­யோர் கோல் போட்­ட­னர். மால்­டா­வின் ஃபெர்னான்­டினோ போட்ட சொந்த கோல் இங்­கி­லாந்­துக்­குச் சாத­க­மாக அமைந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!