திமுக தலைமையில் அமையும் எட்டுக் கட்சிகள் கூட்டணி

சென்னை: எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் திமுக தலைமை யிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம்பெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட் டணியில் பாமக இடம்பெற வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் மே மாதத்திற்குள் தேர் தல் நிச்சயம் நடந்து முடியும் என்ப தால் கூட்டணி அமைப்பதிலும், பிரசார வியூகங்களை வகுப்பதிலும் அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக ஆகிய இரு மாநிலக் கட்சிகளும், தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. திமுகவைப் பொறுத்தவரை காங்கிரசுடன் கூட் டணி அமைக்க இருப்பதை மு.க. ஸ்டாலின் முன்பே உறுதிசெய்து விட்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் பத விக்கு முன்மொழிவதாகவும் அவர் ஏற்கெனவே கூறியுள்ளார்.
இந்நிலையில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைப்ப தற்கான வாய்ப்புகள் அதிகரித்துள் ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 
மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித் துள்ளார். தனித்துப் போட்டி என அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரனும் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக, புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, இந்திய மக்கள் கல்விக் கழகம் ஆகிய கட்சிகள் பங்கேற்க வாய்ப்புள்ளது. இக்கூட்டணியில் பாமக, தேமுதிக வும் இடம்பெறக்கூடும். 
இந்நிலையில் திமுக கூட்டணி யில் 8 கட்சிகள் இடம்பெறுவது உறுதியாகி இருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெறுவது முன்பே உறுதியாகி விட்டது. 
எனினும் பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் இக்கூட்டணியில் இடம்பெற விரும்பின. இரு கட்சிகளுக்கும் இடையே இதில் போட்டி நிலவியது. ஒருகட்டத்தில் பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என அதன் தலைவர் திருமாவள வன் திட்டவட்டமாக அறிவித்தார்.
அதேசமயம் பாமக அதிக தொகுதிகளைக் கேட்டதால் அக் கட்சியை கூட்டணியில் சேர்க்க திமுக தரப்பில் தயக்கம் காட்டப் பட்டது. இதனால் பாமக தலைமை அதிருப்தி அடைந்ததாகவும் கூறப் பட்டது.
இந்நிலையில் அதிமுக அரசைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள் ளார் பாமக தலைவர் ராமதாஸ். இதனால் பாமக, அதிமுக கூட்டணியில் இணைவது உறுதி யாகிவிட்டதாக தகவல்கள் தெரி விக்கின்றன. இதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்ட ணியில் இணைவதற்கான தடை நீங்கியதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
2019-02-13 06:00:00 +0800