ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மேல் முறையீடு

சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக அதன் உரிமையாளரான வேதாந்தா குழுமம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. முன்னதாக அந்த வழக்கை விசாரித்த இந்திய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கடந்தாண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டபோதும் அதனை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நிறுத்தி வைத்தது. இதனைத் தொடர்ந்து வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் மூடுவதற்கான உத்தரவு சட்டவிரோதமானது என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வேதாந்தா குழுமம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

கடந்தாண்டு மே மாதத்தில் சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டுக்கு எதிராக வெடித்த ஆர்ப்பாட்டத்தில் 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்தச் சம்பவம் அப்போது முதல் தமிழகத்தில் அரசியல் மற்றும் சமய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்தியப் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் இந்நேரத்தில் ஆலை மீண்டும் திறக்கப்படாது என்று அரசியல் கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அண்மையில் ஒரு நாள், தன் மகன் கதிர் ஆனந்தையும் மருமகளையும் வாழ்த்தி ஆசீர் வதித்த தந்தை துரை முருகன். படம்: ஃபேஸ்புக்

20 Jul 2019

துரைமுருகன்: இன்னமும் சதி தொடர்கிறது

போலிஸ்காரர்கள் சமூகப் பணியில் இறங்கியதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். படம்: தமிழக ஊடகம்

20 Jul 2019

போலிசாரின் பொதுத்தொண்டு