பள்ளிகள், திரையரங்குகளை மூட தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமி பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர மாநிலங்கள் முழு வதும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள், திரையரங்குகளை மூடுவதற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா கிருமியின் தாக்கத்தால் நேற்று மாலை நேரத்துடன் 6,527 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த இறப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா கிருமி பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர பலதரப் பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான தொடக் கப்பள்ளிகளுக்கும் வரும் 31ஆம் தேதி விடுமுறை விடப்படுகிறது.

“கொரோனா தொற்றைத் தடுப்ப தற்காக மாநிலம் முழுவதும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

“தமிழக மக்கள் தேவையின்றி வெளிமாநிலங்களுக்குச் செல்லவேண்டாம்.

“எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ண கிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக் கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்கு களையும் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் வரும் 31ஆம் தேதி வரை மூட உத்தர விடப்பட்டுள்ளது.

“கொரோனா தடுப்பு நடவடிக்கை களை முடுக்கிவிட ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து சுகாதாரம், குடும்ப நலத்துறைக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

“மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வும் உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார் முதல்வர் பழனிசாமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!