அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்: இரண்டாம் இடத்தில் தமிழகம்

சென்னை: கொரோனா கிரு­மித் தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள மாநி­லங்­க­ளின் பட்­டி­ய­லில் தமி­ழ­கம் இரண்­டாம் இடத்­தைப் பிடித்­துள்­ளது. இதை­ய­டுத்து கிரு­மித் தொற்­றுப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் மேலும் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

இந்­நி­லை­யில் தமி­ழ­கத்­தில் ஜூலை 31ஆம் தேதி வரை ஊர­டங்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக அரசு அறி­வித்­துள்­ளது. தற்­போது கடைப்பி­டிக்­கப்­படும் தளர்வு, கட்டுப்­பாடு­க­ளு­டன் இந்த ஊர­டங்கு நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக நேற்று முன்­தி­னம் இரவு அரசு அறி­வித்­தது.

சிகிச்­சைக்­குப் பின் குண­ம­டை­வோர் விகி­தம் நாட்­டி­லேயே தமி­ழ­கத்­தில்­தான் அதி­கம் என்­றும் தமி­ழ­கத்­தில்­தான் நோய்த்­தொற்­றால் ஏற்­படும் உயி­ரி­ழப்­பு­கள் மிகக் குறை­வாக உள்­ளது என்­றும் அரசு வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் ஜூலை மாதம் 4 ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மாநி­லம் முழு­வு­தும் முழு ஊர­டங்கு உத்­த­ரவு அமல்­ப­டுத்­தப்­படும் என்­றும் ஜூலை 15ஆம் தேதி வரை பேருந்து போக்கு­வ­ரத்­துக்­குத் தடை விதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அரசு அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் கட்­டுப்­பா­டு­க­ளு­டன் கூடிய ஊர­டங்கு அம­லில் உள்ள நிலை­யில், சென்னை, மதுரை, செங்­கல்­பட்டு, திரு­வள்­ளூர் காஞ்­சி­பு­ரம் ஆகிய 5 மாவட்­டங்­களில் மட்­டும் முழு ஊர­டங்கு அம­லில் இருக்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 86,224 ஆக அதி­க­ரித்­துள்­ளது. பலி­யா­னோர் எண்­ணிக்கை 1,141 ஆக உள்­ளது. இது­வரை 47,749 பேர் குண­ம­டைந்­துள்ள நிலை­யில் சுமார் 37 ஆயி­ரம் பேருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!