சென்னையில் 10,000 வீடுகளைச் சூழ்ந்த மழைநீர்

ஆலந்­தூர்: நிவர் புயலைத் தொடர்ந்து, சென்­னை­யி­லும் அத­னைச் சுற்­றி­யுள்ள புற­ந­கர்ப் பகு­தி­க­ளி­லும் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக, ஏறத்தாழ 10,000 வீடு­களைச் சுற்றி மழை­நீர் தேங்கி நின்றதால் தங்களால் வீடு­களை விட்டு வெளியேற முடி­யாத நிலையில் பொது­மக்­கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், சில பகு­திகளில் உள்ள தெருக்­களில் கழிவு நீரு­டன் மழை­நீ­ரும் கலந்து ஆறாக ஓடு­வதால் அங்கு சுகா­தாரச் சீர்­கேடு ஏற்­படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

வங்­கக்­க­ட­லில் உரு­வான நிவர் புயல் புதுச்­சேரி அருகே நேற்று முதன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் கரை­யைக் கடந்­த­தை அடுத்து, சென்னையிலும் இதன் பாதிப்பு உணரப்பட்டது.

இருப்பினும், இந்த நிவர் புய­லால் சென்­னை­யில் மிகப்பெரிய அளவில் மோசமான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் கடந்த இரு நாட்களாகத் தொடர்ந்து பெய்யும் கன­மழை ­கார­ண­மாக பல்­வேறு பகு­தி­களிலும் உள்ள சாலை­கள் மழைநீரில் மூழ்­கின.

குறிப்­பாக, சென்­னை­யின் புற­நகர்ப் பகு­தி­கள் வெள்­ளக்­கா­டாக காட்­சி­ய­ளித்தன.

முடிச்­சூர், மணி­மங்­க­லம், வர­த­ரா­ஜ­பு­ரம் உள்­ளிட்ட பகு­தி­களின் சாலைகள் முற்­றி­லு­மாகத் துண்­டிக்­கப்­பட்­டன.

ஆலந்­தூர் மண்­ட­லத்­திற்கு உட்­பட்ட ஆதம்­பாக்­கம் நியூ காலனி, பாரத் நகர், சக்தி நகர், நில­மங்கை நகர், சரஸ்­வதி நகர் போன்ற பகு­தி­களில் உள்ள 60க்கும் மேற்­பட்ட தெருக்­களில் முழங்­கால் அள­விற்கு தண்­ணீர் தேங்­கி­யது. இந்தப் பகு­தி­யில் உள்ள 3,000க்கும் அதி­க­மான வீடு­களை மழை­நீர் சூழந்­தது.

வேளச்­சேரி ஆண்­டாள் நகர், ஏ.ஜெ.எஸ்.காலனி, நேத்தாஜி காலனி போன்ற பகு­தி­களில் உள்ள 5,000க்கும் அதி­க­மான வீடு­களைச் சுற்றிலும் மழை­நீர் தேங்கியிருந்­தது.

கிண்டி நர­சிங்­க­பு­ரம், மசூதி காலனி, புதுத்­தெரு, வண்­டிக்­காரன் தெரு ஆகிய பகு­தி­களில் உள்ள 2,000 வீடு­களையும் மழை­நீர் சூழ்ந்து நின்றது.

இப்பகு­தி­களில் மழை­நீர் வடி­கால்­வாய்­கள் அமைக்­கப்­ப­டா­த­தால் தண்­ணீர் வெளி­யேற முடி­யா­மல் குடி­யி­ருப்புப் பகு­தி­களைச் சுற்றி தேங்கி நின்றதாகவும் கூறப்படு கிறது.

இதற்கிடையே, நிவர் புயலால் 36 வருவாய் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்களைக் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதியளித்துள்ளார்.

“முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்பட்டதால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்து உள்ளோம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு நிவாரணங்களை விரை வில் முதல்வர் அறிவிப்பார்,” என்று அைமச்சர் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!