வேலை வாங்கித் தருவதாக ரூ.4 கோடி மோசடி: தம்பதி கைது

சென்னை: ஆசி­ரி­யர் பணி உள்­ளிட்ட பல்வேறு அர­சாங்க வேலை களையும் வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி 60 பேரி­டம் ரூ.4 கோடிக்­கு­ மேல் நம்பிக்கை மோசடி செய்த தம்­ப­தியை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலி­சார் கைது செய்­த­னர்.

இந்த தம்­ப­தி­கள் மீது தொடர்ந்து புகார்­கள் குவிந்து வரு­வ­தால் அவர்­களை ஐந்து நாள்­கள் காவ­லில் எடுத்து விசா­ரிக்­க­வும் போலிசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை போலிஸ் ஆணை­யர் அலு­வ­ல­கத்­தில் காந்தா, 42, என்­ப­வர் அளித்த புகார் மனு­வில், “எனது மக­னுக்கு விமான நிலை­யத்­தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்­சத்தை கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை வள­ச­ர­வாக்­கத்தைச் சேர்ந்த சசி பிரி­யா­வும், 43, அவ­ரது கண­வர் ரவிச்­சந்­தி­ர­பா­பு­வும், 51, பெற்­ற­னர்.

“ஆனால், அவர்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை. இது­கு­றித்துக் கேட்­டால் தகாத வார்த்­தை­களில் உயி­ருக்கு மிரட்­டல் விடுக்கும் வகையில் பேசுகின்ற னர்,” என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

எனவே, தம்­பதியர் மீது நட­வ­டிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரவேண்­டும் என்று கூறி­யி­ருந்­தார்.

புகா­ரின்­படி விசா­ரணை நடத்த போலிஸ் ஆணை­யர் சங்­கர் ஜிவால் மத்­திய குற்­றப்­பி­ரிவு போலிசாருக்கு உத்­த­ர­விட்டார்.

விசா­ரணையில் மோசடி உறுதி யானதை அடுத்து, வடபழனியில் தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

அவர்­க­ளி­டம் இருந்து மோச­டிக்குப் பயன்­ப­டுத்­திய போலி அரசு முத்­தி­ரை­யு­டன் கூடிய கடி­தங்­கள், போலி­யான பணி நிய­மன ஆணை­கள், 1 மடிக்கணினி, 10 கைபேசி­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!