சிறுமி பாலியல் வழக்கு: 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

சென்னை: சென்னை, வண்­ணா­ரப்­பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறு­மியைப் பாலி­யல் துன்­புறுத்­த­லுக்கு ஆளாக்கிய வழக்கு தொடர் பில், எண்ணூர் காவல் ஆய்­வா­ளர், பாஜக பிர­மு­கர் உள்­ளிட்ட 21 பேரை குற்­ற­வா­ளி­கள் என 'போக்சோ' சிறப்பு நீதி­மன்­றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

சென்னை உயர் நீதி­மன்ற வளா­கத்­தில் உள்ள 'போக்சோ' சிறப்பு நீதி­மன்ற நீதி­பதி ராஜ­லெட்­சுமி வழக்கை விசாரித்து, 21 பேரைக் குற்­ற­வா­ளி­கள் என தீர்ப்­ப­ளித்தார்.

தீர்ப்பின் விவ­ரங்­கள் இம்மாதம் 19ஆம் தேதி­யன்று அறி­விக்­கப்­படும் என்றும் அவர் உத்­த­ர­விட்­டார்.

சிறு­மி­யைப் பாலி­யல் தொழி­லில் ஈடு­பட வைத்து, அவரை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கி­ய வழக்குத் தொடர்பில், குற்­றம்­சாட்­டப்­பட்ட 26 பேரில் நால்வர் காணா­மல் போயுள்­ள­னர். ஒரு­வர் உயி­ரிழந்­து­விட்­டார். மீதமுள்ள 21 பேரும் குற்­ற­வாளி­கள் என தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.

கடந்த 2020ல் சிறு­மியைப் பாலி யலில் ஈடு­ப­டுத்­தி­ய­தாக சிறுமி­யின் உற­வி­னர் ஷகிதா பானு, அவருக்கு உடந்­தை­யாக இருந்த காவல் ஆய்­வா­ளர் புக­ழேந்தி, தனி­யார் தொலைக்­காட்சி செய்­தி­யா­ளர் வினோ­பாஜி, பாஜக பிர­மு­கர் ராஜேந்தி­ரன், நாக­ராஜ், மாரீஸ்­வரன், பொன்­ராஜ் உள்­ளிட்ட 26 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, அவர்களில் 21 பேர் கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் கைதாகினர்.

கைதான தர­கர் ராஜேந்­தி­ர­ னிடம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யில், ஏழைச் சிறு­மி­களைப் பாலி­யல் தொழிலில் ஈடு­ப­டுத்­தி­ய­தையும் பல துறை­களைச் சேர்ந்த உயர் அதி­கா­ரி­களுக்கு சிறு­மி­களை அனுப்பி வைத்ததையும் ஒப்­புக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!