சுடச் சுடச் செய்திகள்

இசை, ஒளி விருந்துடன் அணிவகுப்பின் இரண்டாம் அங்கம்

தேசிய தின அணிவகுப்பின் இரண்டாம் அங்கம் இன்று இரவு 8.15 மணிக்குத் தொடங்கியது. பாடாங்கில் இன்று காலை நடந்தேறிய முதல் அங்கத்தைப் போல ஸ்டார் விஸ்டா மேடைக்கலை நிலையத்தில் அரங்கேறும் இந்த அங்கத்தில் 150 பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டனர். 

இரவு 7 மணிக்குத் தொடங்கிய கலைநிகழ்ச்சியில் பல்வேறு மொழிகளில் நாட்டுப்பற்றுப்பாடல்களைப் பாடிய கலைஞர்களுடன் இணைந்த பல வண்ண ஒளி நிகழ்ச்சியும் உயிரோவிய அம்சங்களும் இடம்பெற்றன.

 

கொவிட்-19 கிருமிப்பரவலை எதிர்கொண்ட சிங்கப்பூரர்களின் அனுபவங்களைப் பற்றியும் இந்நிகழ்ச்சியின்போது விளக்கப்பட்டன. 

தேசிய பற்றுறுதி இரவு சுமார் 8.20 மணி எடுக்கப்படும். அதன்பிறகு பார்வையாளர்கள் தங்களது கைப்பேசிகளிலுள்ள மின்-பந்தங்களை அசைத்து  ‘ சிவப்பு விண்மீன் அலைகளை’ப் போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்கினர். இறுதியாக இந்தக் கொண்டாட்டங்கள்,  சிங்கப்பூரிலுள்ள 10 வெவ்வேறு குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்படும் வாணவேடிக்கைகளுடன் நிறைவடைந்தன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon