கிருமித்தொற்றுக்கு ஆளானோர் அடிக்கடி சென்றுவந்த இடங்கள்

ஜூரோங், பிடோக், செங்காங், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகள்

கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் கடந்த மூன்று நாள்­களில் அடிக்­கடி சென்று வந்த இடங்­கள் குறித்த விவ­ரங்­க­ளைச் சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பான தக­வ­லு­டன் கூடிய நிலப்­ப­டம் நேற்று முதன்­மு­த­லாக வெளி­யி­டப்­பட்­டது. சுகா­தார அமைச்­சின் கொவிட்-19 நிலவர இணை­ய­வா­யி­லில் அந்த நிலப்­ப­டம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அப்­ப­டத்­தில் சிங்­கப்­பூர் நிலப்­ப­ரப்பு முழு­வ­தும் துணை மண்­ட­லங்­களாகப் பிரிக்­கப்­பட்­டுள்­ளன.

அதன்­படி, மேற்­கில் யுன்னான், ஜூரோங் வெஸ்ட் சென்ட்­ரல், கியன் டெக், ஜுரோங் ஆறு, கிழக்­கில் கேலாங் ஈஸ்ட், பிடோக் நார்த், தெம்­ப­னிஸ் ஈஸ்ட், வட­கி­ழக்­கில் செங்­காங் டவுன் சென்­டர், வடக்­கில் செனோக்கோ சௌத், உட்­லண்ட்ஸ் ஈஸ்ட் ஆகிய 12 பகு­தி­களில் கொவிட்-19 நோயா­ளி­கள் அடிக்­கடி சென்­று­வந்­துள்­ள­னர். கடந்த மூன்று நாள்­களில் 230க்கும் 560க்கும் இடைப்­பட்ட கொரோனா நோயா­ளி­கள் அங்கு அடிக்­கடி சென்­று­வந்­துள்­ள­னர்.

வரு­கை­பு­ரிந்த கொவிட்-19 நோயா­ளி­கள் எண்­ணிக்­கை­யின் அடிப்­ப­டை­யில், சிங்­கப்­பூர் நிலப்­பரப்பு ஐந்து பிரி­வு­க­ளா­கப் பிரிக்­கப்­பட்டு, எளி­தில் அடை­யா­ளம் காணும் வகை­யில் வெவ்­வேறு வண்­ணங்­கள் தரப்­பட்­டுள்­ளன. 230 முதல் 560 வரை­யி­லான கொவிட்-19 நோயா­ளி­கள் சென்று­வந்த பகு­தி­கள் உச்­சப்­பி­ரி­வின்­கீழ் வரு­கின்­றன.

அந்த நில­வ­ரத்­திற்­கேற்ப, மக்­கள் தங்­க­ளின் நட­மாட்­டத்­தை­யும் நட­வ­டிக்­கை­க­ளை­யும் திட்­ட­மிட்­டுக்­கொள்ள இந்த நிலப்­ப­டம் உத­வும் என்று கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு கடந்த வாரம் வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்­தி­ருந்­தது.

"அதி­க­மான கொவிட்-19 நோயா­ளி­கள் சென்­று­வந்த இடங்­களில், அதே நேரத்­தில் இருந்­த­வர்­கள், அதற்­க­டுத்த பத்து நாள்­களுக்கு தங்­க­ளது உடல்­நி­லை­யைக் கண்­கா­ணித்­துக்­கொள்­ள­வும் அவ்­வப்­போது தாங்­க­ளாக ஆன்­டி­ஜன் விரை­வுப் பர­சோ­தனை செய்­து­கொள்­ள­வும் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்," என்று பணிக்­குழு கூறி­யி­ருந்­தது.

கொரோனா தொற்­றி­யோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­கள் அல்­லது கிரு­மிப் பர­வல் அதி­க­மாக இருந்த இடங்­க­ளுக்­குச் சென்று வந்­த­வர்­க­ளி­டம் அது­கு­றித்­துத் தக­வல் தெரி­விக்க சேஃப்என்ட்ரி, டிரேஸ்­டு­கெ­தர் தர­வு­கள் தொடர்ந்து பயன்­ப­டுத்­தப்­படும் என்­றும் அக்­குழு தெரி­வித்­தி­ருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!