இந்திய ரூபாய், பவுண்ட் மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிவு

அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு நேற்று 0.68 விழுக்­காடு சரிந்து வர­லாறு காணாத அள­வாக 81.55க்கு வீழ்ச்சிய­டைந்­தது.

கொவிட்-19 கொள்ளை நோய்க்­குப் பிறகு உல­கப் பொரு­ளி­யல் மீண்டு வரும் என பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் ரஷ்யா-உக்­ரேன் போர், அத­னால் அதி­க­ரித்த பொருள்­க­ளின் விலை உயர்வு, பண­வீக்­கம் போன்­றவை அந்த எதிர்­பார்ப்பைக் குறைத்துவிட்டன.

அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து, ஐரோப்­பிய நாடு­கள் முதல் சீனா வரை பொரு­ளி­யல் நெருக்­கடி ஏற்­ப­ட­லாம் என்று பொரு­ளி­யல் நிபு­ணர்­கள் கரு­து­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் பண­வீக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­கள் மத்­திய வங்­கி­யின் வட்டி விகி­தத்­தை அதி­க­ரித்து வரு­கின்­றன.

அமெ­ரிக்­கா­வின் மத்­திய வங்கி மூன்றாவது முறை­யாக வட்டி விகி­தத்தை உயர்த்­தி­யது.

இந்­தி­யா­வின் ரிசர்வ் வங்­கி­யும் வட்டி விகி­தத்தை உயர்த்தி வரு­கிறது.

தற்­போது இந்­தி­யா­வின் பண­வீக்­கம் ஏழு விழுக்­கா­டாக உள்­ளது.

ஆனால் இதனை ஆறு விழுக்­கா­டாக வைத்­தி­ருக்க வேண்­டும் என்­பது இந்­திய ரிசர்வ் வங்­கி­யின் இலக்­கா­க உள்ளது.

இந்த நிலை­யில் ரூபா­யின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரு­கிறது.

இதற்­கி­டையே இங்­கி­லாந்­தின் புதிய அர­சாங்­கம் கடந்த வாரம் பல்­வேறு வரிச்சலு­கை­களை அறி­வித்­த­தால் பவுண்­டின் மதிப்­பும் சரிந்­தது.

டால­ருக்கு நிக­ரான பவுண்­டின் மதிப்பு 4.9 விழுக்­காடு குறைந்து $1.03க்கு சரிந்­தது. பின்னர் 1.05 டாலருக்கு நிலைபெற்றது. இது, முந்தைய பரிவர்த்தனை முடிவுற்ற போது இருந்த நிலையுடன் ஒப்பிடு கையில் 2.9 விழுக்காடு குறை வாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை பவுண்டின் மதிப்பு மொத்தம் 3.6 விழுக்காடு சரிந்தது.

பொரு­ளி­யல் வளர்ச்­சியைத் தூண்டுவ­தற்­காக பிரிட்டனின் புதிய நிதி அமைச்சர் குவாசி குவார்டெங், வரிச்சலுகைகளையும் முதலீட்டு ஊக்­கு­விப்­பு­களையும் அறி வித்தார்.

இது, பவுண்­டின் மதிப்பை பாதிக்கச் செய்துள்ளது.

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான பவுண்டின் மதிப்பு நேற்று காலை 11.00 மணி நிலவரப்படி 2.89 விழுக் காடு குறைந்து S$1.5079ஆனது.

இவ்வாண்டில் சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான பவுண்டின் மதிப்பு சுமார் 17 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!