குடமுழுக்கு கண்ட முருகன் திருக்குன்றம் கோயில்

மோன­லிசா

அப்பர் புக்கிட் தீமா சாலையில் அமைந்துள்ள முருகன் திருக்குன்றம் கோயில் மூன்றாவது முறையாக நேற்று குடமுழுக்கு கண்டது. கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அதிகாலை 4.30 மணி அளவில் துவங்கிய ஆறாம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து காலை 7 மணியளவில் கடப்புறப்பாடு தொடங் கியது. காலை 7.30 மணிக்கு ராஜகோ புரத்தின் ஐந்து கலசங்கள், மூன்று பிர தான விமானங்களில் உள்ள கலசங்களில் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்ட, உள்துறை, அமைச்சர் கா சண்முகம், “கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் மறுசீரமைப்புப் பணிகள் தடைபட்டாலும், இவ்வாண்டு தொடங்கப்பட்ட பணிகள் துரிதமாக நிறைவடைந்துள்ளன,” என்றார். ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு எட்வர்ட் சியாவும், புக்கிட் பாஞ்சாங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு லியாங் எங் ஹுவாவும் விழாவில் பங்கேற்றனர்.

சிற்பங்கள் சீரமைப்பு, வண்ணப்பூச்சு, பிரதான சன்னதியைச் சுற்றி கண்ணாடிக் கூரை உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுடன், புதிதாக ஆத்மலிங்கம், அங்காளபரமேஸ்வரி, பிரித்தியங்கா தேவி, பட்டவராயன் சன்னதிகளும் அமைக்கப் பட்டுள்ளன. இக்கோயிலின் மூத்த தொண் டூழியர் திரு காளிமுத்து சுப்பிரமணியம், 66, “பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குடமுழுக்கு விழா பல கோயில்களின் உதவியுடனும் பொது மக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடை பெற்றது,” என்றார்.

பக்தர்கள் வசதியாக அமர்வதற்கு கூடாரம் அமைக்கப்பட்டு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. அடிப்படை மருத்துவ வசதி, கூட்டநெரிசல் கட்டுப்பாடு, காவல் படை என பிற முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!