அனல்காற்று: மலேசியாவில் 259 பள்ளிகள் மூடல்

பெட்டாலிங் ஜெயா: அனல்காற்றின் தாக்கம் காரணமாக மலேசியாவில் பாகாங், பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள 259 பள்ளிக்கூடங்கள் நேற்று மூடப்பட்டன. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து 72 மணி நேரத்திற்கு வெப்ப அளவு 37 டிகிரி செல்சியஸ் ஆக இருந்ததால் பெர்லிஸ் மாநிலத்திலும் பாகாங் மாநிலத்திலுள்ள ஜெராண்டுட், தெமர்லோ ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று மூடப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்தது. அவ்விரு மாநிலங்களில் உள்ள பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி களில் படிக்கும் 100,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கூடங் களை மூட முடிவு செய்ததாக கல்வி அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

எனினும் மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிக்கூட வகுப்பு களில் கலந்துகொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு அப்பாற்பட்டு ஆசிரி யர்கள் அனைவரும் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக பள்ளிக்கு வரவேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதை பாகாங், பெர்லிஸ் கல்வி இலாகாக்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

கடும் வெயில் தாக்காமல் இருக்க மாணவர்கள் தங்கள் பள்ளிப்பைகளை பயன்படுத்துகின்றனர். நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!