‘இரு பாகங்களும் MH370 விமானத்தினுடையதுதான்’

புத்ரா ஜெயா: தென்னாப்­பி­ரிக்கா, மொரி­‌ஷி­ய­சின் ரோட்ரிக் தீவு­களில் கண்­டெ­டுக்­கப்­பட்ட விமானப் பகு­தி­கள் கண்­டிப்­பாக மலேசியாவின் எம்எச்370 விமா­னத்­தின் பாகங்கள்­தான் என்று மலேசியா வின் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் லியோ தியோங் லாய் கூறி­யுள்­ளார். கிடைக்­கப்­பெற்ற இரண்டு விமான இயந்­திர பாகங்களி­லும் ரோல்ஸ் ரோய்ஸ் முத்திரை பொறிக்­கப்­பட்­டி­ருந்தது. மலே­சி­யா­வின் பாது­காப்­புச் சோதனைக் குழு, "அவை உறுதி யாக எம்எச்370 விமா­னத்­தின் பாகங்கள்­தான்," என்று கூறி­ உள்­ளது. "ஆஸ்­தி­ரே­லியாவின் போக்­கு ­வ­ரத்­துப் பாது­காப்­புப் பிரி­வுக்­கும் போயிங் நிறு­வ­னத்­துக்­கும் நன்றி தெரிவித்துக் கொள்­கி­றோம்.

"மொசாம்பிக், மொரி­‌ஷி­யஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டு அர­சாங்கங்களின் ஒத்­துழைப்­புக்கும் நன்றி," என்று அமைச்­சர் லியோ தியோங் லாய் கூறினார். 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மொத்தம் 239 பேருடன் புறப்­­­பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சிறிது நேரத்­­­தில் மாய மாய் மறைந்தது. அப்­­­போ­­­தி­­­லி­­­ருந்து அந்த விமா­­­னத்தைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. மலேசியா, ஆஸ்­தி­ரே­லியா, சீனா ஆகிய நாடுகள் விமானத் தைத் தேடும் பணியில் இணைந்தன. இதுவரை 105,000 சது­ர­கி­லோ­மீட்­டர் பரப்­ப­ள­வில் தேடல் பணி முடிக்­கப்பட்­டுள்­ளது.

கடந்த மார்ச் மாதம் கிழக்கு ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் கடற்கரையோரம், மொசெல் வளைகுடாவுக்கு அருகில் கிளிய்ன் பிராக் ஆற்றை ஒட்டி கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகம் (படம்) மலேசியாவின் எம்எச்370 விமா­னத்­தினுடையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!