கோலாலம்பூரில் திடீர் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு, வாகன நெரிசல்

கோலாலம்பூர்: மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் கோலாலம்பூர்வாசிகள் தவிக்க நேர்ந்தது. முக்கிய சாலைகளில் வெள்ள நீர் தேங்கிய நிலையில் வெள்ளநீரை கட்டுப்படுத்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை குழுவினர் வரவழைக்கப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். திடீர் வெள்ளப்பெருக்கினால் கோலாலம்பூரின் நான்கு முக்கிய சாலைகளும் சிலாங்கூரின் சில பகுதிகளும் பெரிதும் பாதிக் கப்பட்டன. நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலைகளில் வெள்ளநீரில் சிக்கிக் கொண் டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சில இடங்களில் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை குழுவினர் வரவழைக்கப்பட்டு வாகனங்களை மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெள்ளத்தில் வாகனங்கள் சிக்கிக்கொண்ட நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதியுற்ற ஒரு பெண்மணி உள்பட 11 பேரை மீட்புக் குழுவினர் மீட்டதாக அதிகாரிகள் கூறினர்.

கோலாலம்பூர் சாலைகளில் தேங்கியுள்ள வெள்ளநீரில் சிக்கிக்கொண்ட வாகனங்களை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்