வான்குடை இல்லாமல் 25,000 அடி உயரத்திலிருந்து குதித்த சாகச வீரர்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆகாய சாகச வீரர் லூக் ஐகின்ஸ் வான்குடை இல்லாமல் 25,000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்துள்ளார். சுமார் 42 வயதான ஐகின்ஸ் இதற்கு முன்பு வான்குடை மூலம் வானிலிருந்து குதித்து 18,000 சாகசங்களைச் செய்துள்ளார்.
இதில் திருப்தியடையாத அவர் வான்குடை இல்லாமல் வானிலிருந்து குதிக்க விரும் பினார். இதற்காக ஒன்றரை ஆண்டு காலமாக தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர் சனிக்கிழமை அந்த சாகசப் பணியில் ஈடு பட்டார்.

கலிஃபோர்னியா மாநிலத்தில் பாலைவனப் பகுதிக்கு உயரே ஒரு விமானத்திலிருந்து அவர் கீழே குதித்தார்.


வான்குடை எதுவும் இல்லாமல் சுமார் 25,000 அடி (7,600 மீட்டர்) உயரத்தில் இருந்து அவர் கீழே குதித்தார். மணிக்கு 150 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருந்த அவர் சுமார் 18,000 அடி உயரத்திற்கு வந்த பிறகு அவர் அணிந்திருந்த ஆக்சிஜன் முக மூடியையும் அவர் கழற்றிவிட்டதாகக் கூறப்பட்டது. அவர் பாதுகாப்பாக தரையில் இறங்குவதற்கு ஏதுவாக தரையில் ஒரு வலை விரிக்கப்பட்டிருந்தது.
அந்த இடத்தைச் சுற்றிலும் லூக்கின் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும், ரசிகர் களும் பதற்றத்துடன் காத்திருந்த போது அவர் பாதுகாப்பாக தரையில் இறங்கினார். அவரது மனைவியும் நண்பர் களும் அவரை உற்சாகமாக வர வேற்றனர். வானிலிருந்து லூக் கீழே குதிக்கும் சாகசக் காட்சிகள் அனைத்தும் பிரபல தொலைக்காட்சி ஒளிவழியில் நேரடியாக ஒளிபரப்பானது.

ஆகாய சாகச வீரரான லூக் ஐகின்ஸ் கலிஃபோர்னியா மாநிலத்தில் 25,000 அடி உயரத்திலிருந்து கீழே குதிக்கிறார். திரைப்படங்களில் சாகசக் காட்சிகளில் நடித்துள்ள 42 வயதான லூக், விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விமானியாக இருந்திருக்கிறார். பள்ளிக் கூடத்தில் படிக்கும் காலத்தில் அவர் தனது 12வது வயதில் முதன் முதலில் ஆகாயத்திலிருந்து குதித்திருக்கிறார். படம்: யுடியூப்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!