பிலிப்பீன்ஸ்: ராணுவத்திற்குக் கூடுதல் அதிகாரம்

டாவோ நகரில் நேற்று முன்தினம் பரபரப்பான இரவுச் சந்தையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந் தது 14 பேர் பலியானதை அடுத்து அங்கு சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக அறிவித்துள்ளார் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டே. இந்த அசம்பாவிதத்தை 'பயங்கரவாதச் செயல்' எனக் குறிப்பிட்ட திரு டுடெர்ட்டே, அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பிலிப்பீன்ஸ் ராணு வத்திற்குக் கூடுதல் அதிகாரங் களை வழங்கியுள்ளார். தலைநகர் மணிலாவிலிருந்து சுமார் 1,500 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டாவோதான் திரு டுடெர்ட்டேவின் சொந்த ஊர் என்பதும் அதிபராவதற்குமுன் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அநகரின் மேயராக அவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

குண்டுவெடிப்பு பற்றி தகவல் அறிந்ததும் தமது புருணை பய ணத்தை ரத்து செய்துவிட்டு நேற்றுக் காலையில் சம்பவ இடத் திற்கு விரைந்தார் திரு டுடெர்ட்டே. தென்பிலிப்பீன்சின் ஆகப் பெரிய, சுமார் இரண்டு மில்லியன் பேர் வசித்து வரும் டாவோ நகரத்தில் அமைந்துள்ள பிரபல மான ஹோட்டலுக்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்தத் தாக்குதலில் மேலும் 67 பேர் காயமடைந்ததாகவும் அவர் களில் 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு அபு சாயஃப் பயங்கரவாத அமைப்பின் பதிலடியாக அல்லது போதைப் பொருள் கடத்தல்காரர்களின் கை வரிசையாக இருக்கலாம் என்று கருதுவதாக திரு டுடெர்ட்டே சொன்னார்.

டாவோவில் இருந்து 900 கி.மீ. தொலைவில் உள்ள ஜோலோ தீவில் அபு சாயஃப் வலுவாகக் காலூன்றி உள்ளது. அண்மையில், அந்த அமைப்பினர் மீது தாக்கு தலைத் தீவிரப்படுத்தும்படி திரு டுடெர்ட்டே உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, கடந்த திங்கட் கிழமையன்று ராணுவத்திற்கும் அந்த அமைப்புக்கும் இடையே நடந்த மோதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அபு சாயஃப் தரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், "டாவோ குண்டு வெடிப்பிற்கு அபு சாயஃப் பயங்கர வாத அமைப்பே காரணம்," என்று டாவோ நகர மேயரும் அதிபரின் மகளுமான சாரா டுடெர்ட்டே தெரி வித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!