வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் சீனா கூட்டு

நியூயார்க்: அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவும் சீனப் பிரதமர் லி கெக் கியாங்கும் ஒன்றிணைந்து வடகொரியாவின் அணுவுாயுதச் சோதனைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் இணைந்து போராட இணக்கம் கண்டுள்ளனர். இதனை வெள்ளை மாளிகை நேற்று தெரிவித்தது. வடகொரியா மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் எந்திரத்துடன் கூடிய ஏவுகணைச்சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. சோகா துணைக்கோளம் பாய்ச்சும் தளத்தில் இருந்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையை அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் பார்வையிட்டார். இந்தச்சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதையடுத்து அவர் உயர்மட்ட அதிகாரிகள், விஞ்ஞானிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோரை அழைத்து கிம் பாராட்டினார். வெகுவிரைவில் துணைக்கோளத்தை விண்ணில் பாய்ச்சுவதற்குத் தயாராகுங்கள் என்று அவர்களுக்கு கிம் கட்டளை பிறப்பித்ததாக அந்நாட்டின் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

வடகொரியாவில் செப்டம்பர் 10ஆம் தேதி நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணைச் சோதனை வெற்றியளித்துள்ளதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அந்நாட்டுத்தலைவர் கிம் ஜோங் உன். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுப்பயணிகள், ஆங்கோர் ஆலயத்தைச் சுற்றி வர யானைச் சவாரியைப் பெரிதும் விரும்புகின்றனர். படம்: ஏஎஃப்பி

15 Nov 2019

ஆங்கோர் வாட் ஆலயத்தில் யானைச் சவாரி ரத்து

மேடானில் நிகழ்ந்த தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புப் பணிகளை இந்தோனீசியா முடுக்கிவிட்டுள்ளது. படம்: இபிஏ

15 Nov 2019

மனித வெடிகுண்டு தாக்குதல்: மேடானில் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வென்றால், ஜோகூரின் தென்மேற்கே உள்ள குக்குப் பகுதிக்கும் சிங்கப்பூருக்கும் இடையே படகுச் சேவைகளைத் தொடங்க திட்டங்கள் இருப்பதாக மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார். படம்: மலேமெயில், ஈசோப் மாட் இசா

15 Nov 2019

‘பக்கத்தான் ஹரப்பான் வென்றால் சிங்கப்பூருக்கும் ஜோகூரின் குக்குப் பகுதிக்கும் இடையே படகுச் சேவை