அமெரிக்காவின் ஐநா தூதராக இந்திய வம்சாவளிப் பெண்

வா‌ஷிங்டன்: ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் அடுத்த தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதி செய்துள்ளது. அமைச்சர் அந்தஸ்துக்கு நிகரான இந்தப் பொறுப்புக்கு இந்திய அமெரிக் கர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. தென் கரோலினா மாகாண ஆளுந ரான ஹேலி, 45, நியமனம் செய்யப் படுவதற்கு செனட் சபையில் ஆதர வாக 96 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் பதிவாயின. விரைவில் அவர் அந்தப் பொறுப்பை ஏற்கவிருப் பதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போ தைய தூதராக சமந்தா பவர் உள்ளார்.

அமெரிக்க செனட்டின் ஆளுநர் பொறுப்பை ஏற்ற முதல் இந்திய அமெரிக்கப் பெண்மணி என்ற சிறப்பை ஹேலி ஏற்கெனவே ஏற் படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஹேலியின் பெற்றோர் இந்தி யாவின் பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீ கமாகக் கொண்டவர்கள். அவரது தந்தை அஜித் சிங் ரந்தாவா, தாயார் ராஜ் கவுர் ரந்தாவா.

பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டோரின் மகளான நிக்கி ஹேலி, ஏற்கெனவே மாகாண ஆளுநர் பதவிக்கு வந்த முதல் இந்திய அமெரிக்கப் பெண் என்னும் சிறப்பைப் பெற்றார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!