தென்சீனக் கடல் பகுதியில் சீனா தீவிரம்: ஏவுகணைகள் பாய்ச்சக்கூடிய கட்டமைப்பு

வா‌ஷிங்டன்: தென்சீனக் கடல் பகுதியில் சீனா உருவாக்கியுள்ள செயற்கைத் தீவில் நிலத்திலிருந்து விண்ணில் பாயக்கூடிய நெடுந் தொலைவு ஏவுகணைகளை நிறுவுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டடங் கள் கட்டி முடிக்கப்படும் நிலையில் இருப்பதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்பில் சீனாவின் மீது அமெரிக்காவின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் எனும் கேள்வி எழுந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது. உலகின் முக்கியமான கடல் போக்குவரத்துப் பாதையைக் கொண்டுள்ள தென்சீனக் கடல் பகுதியை கிட்டத்தட்ட முழு வதுமாக சீனா உரிமை கோருகிறது. புரூணை, மலேசியா, பிலிப்பீன்ஸ், தைவான், வியட்னாம் ஆகிய நாடுகளும் தென்சீனக் கடல் பகுதியில் உரிமை கோருகின்றன. விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!