வடகொரியா: அடிக்கு ஏற்ற பதிலடி விழும்

அமெரிக்கா எந்த அணுஆயுத தாக்குதலை நடத்தினாலும் அதே போன்று திருப்பித் தாக்க தான் ஆயத்தமாக இருப்பதாக வட கொரியா பகிரங்க மிரட்டல் விடுத்து இருக்கிறது. சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் குறிப்பிடத் தக்க தாக்குதலை நடத்திவிட்டு அமெரிக்கா இப்போது தனது ஒருமித்த கவனத்தை வட கொரியா பக்கம் திருப்பியுள்ளது. வடகொரியாவை 'போக்கிரி நாடு' என்று அமெரிக்கா வகைப் படுத்தி இருக்கிறது. வடகொரியா அண்மையில் அணுஆயுத, இதர வகை ஏவு கணைகளை வெற்றிகரமான முறையில் சோதித்துப் பார்த்து வருவதாக வெளியாகி வரும் தகவல்கள் தொடர்பில் அந்த நாட்டை அமெரிக்கா கடுமையாக எச்சரித்து வருகிறது.

வடகொரிய அதிபர் கிம் பெரும் தவறு செய்கிறார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் குறிப்பிட்டார். 'யுஎஸ்எஸ் கார்ல் வின்சன்' என்ற விமானந்தாங்கிக் கப்பலை யும் இதர பல துணை போர்க் கப்பல்களையும் கொரியத் தீபகற் பத்திற்கு அமெரிக்க அதிபர் அனுப்பி இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக் காவை வடகொரியா கடுமையாக எச்சரித்து இருக்கிறது. இதற்கிடையே, வடகொரியா வின் ஒரே நட்பு நாடான சீனாவும் ரஷ்யாவும் அமைதி காக்கும்படி எல்லாத் தரப்புகளையும் வலி யுறுத்தி இருக்கின்றன.

இதுவரை யில் வடகொரியாவின் காரியங்களைக் கண்டும் காணாமல் இருந்துவந்த சீனா, வட கொரியாவை வெள்ளிக்கிழமை கடுமையாக எச்சரித்தது. எந்த நேரத்திலும் பிரச்சினை வெடிக்கக்கூடும் என்று சீனா பகிரங்கமாகக் குறிப்பிட்டது. என்றாலும் அமெரிக்காவுடன் போருக்குத் தயார் என்று வட கொரியா மறுபடியும் சூளுரைத்து இருப்பது கொரியத் தீபகற்பத்தில் பெரும் பதற்றத்தைக் கிளப்பி விட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!