பிகேஆர்-பாஸ் கட்சி இடையே பிளவு

கோலாலம்பூர்: மலேசியாவின் இஸ்லாமிய கட்சியான பாஸ், அன்வர் இப்ராஹிம் தலைமை யிலான பிகேஆர் கட்சியுடனான உறவை துண்டிக்கப் போவதாக அறிவித்தது. செய்தியாளர் கூட்டத்தில் நேற்று பேசிய பாஸ் ஆலோசனை மன்றத்தின் செயலாளர் நிக் முஹம்மட் ஸவாவி சாலே, பாஸ் கட்சியின் விருப்பத்திற்கு மாறாக பிகேஆர் கட்சி செயல்பட்டது என்று கூறினார். பாஸ் கட்சியின் முக்கிய கோட் பாடுகளை ஆதரிக்க தவறியது மட்டுமல்லாமல் பிகேஆர் எதிர்க் கவும் செய்தது என்றார் அவர். ஷரியா சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டி நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சி மசோதா ஒன்றைத் தாக்கல் செய்ததை அவர் சுட்டிக் காட்டினார். அக்கட்சி துரோகம் இழைத்து விட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!