கேமரன் மலை தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கேமரன் மலை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் ரம்லி முஹமட் நூர் வெற்றி பெற்று ஆளும் பக்கத்தான் ஹரப்பான் அரசுக்கு அதிர்ச்சி யளித்துள்ளார். 
திரு ரம்லி 12,038 வாக்கு களையும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பக்கத்தான் ஹரப் பான் வேட்பாளர் மனோகரன் 8,800 வாக்குகளை யும் பெற்ற தாக தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது. இதன் மூலம் ரம்லி 3,238 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற தேர்தலில் 68.8 விழுக்காட்டினர் வாக்களித் தனர். திரு ரம்லி, பூர்வகுடி சமு தாயத்தின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
 

Loading...
Load next