ஆஸ்திரேலியாவில் மழையும் வெள்ளப்பெருக்கும் 

ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குயின்ஸ்லாந்து பகுதியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வீடுகள் மற்றும் தெருக்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் மின்சாரம் தடைபட்டதால் மக்கள் தவிக்க நேர்ந்தது. அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்