வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற நஜிப் மனைவி எதிர்ப்பு

கோலாலம்பூர்: முன்னாள் மலே சியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் மீதான ஊழல் வழக்கை அமர்வு நீதிமன் றத்தில் இருந்து உயர் நீதிமன்றத் திற்கு மாற்ற அவரது தரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரி வித்துள்ளனர்.
சரவாக்கில் உள்ள கிராமப்புறப் பள்ளிகளில் சூரிய சக்தித் திட்டங் களைச் செயல்படுத்துவதில் ஊழல் புரிந்துள்ளார் என்பது திருவாட்டி ரோஸ்மா மீதான குற்றச்சாட்டு.
இந்த வழக்கு நேற்று அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை உயர் நீதிமன்றத்தில் நடத்தவேண்டும் என்று தாங்கள் மனு அளித்துள்ள தாகவும் அதற்கு எதிர்த்தரப்பு ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகவும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் முகம்மது டுசுக்கி மொக்தார் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பில் மார்ச் 15ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, அதை உயர் நீதிமன்றத்திற்கு மாற் றுவது குறித்த மனு தொடர்பில் இன்னும் ஒரு முடிவு தெரிய வில்லை என்பதால் விசாரணைத் தேதியைத் தள்ளிவைக்கும்படி திரு மொக்தார் கேட்டுக்கொண் டார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி அஸ்மான் அமான், விசாரணையை 20ஆம் தேதிக்குத் தள்ளிவைப்பதாக அறி வித்தார்.
திருவாட்டி ரோஸ்மா மீதான ஊழல் வழக்கை உயர் நீதிமன்றத் திற்கு மாற்ற ஆட்சேபம் தெரிவித்து  பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக அவரது வழக் கறிஞர் அக்பர்தீன் அப்துல் காதர் கூறினார். 2019-