ஒற்றுமைக்கு அறைகூவல் விடுத்த நியூசிலாந்து பிரதமர்

கிறைஸ்ட்சர்ச்: கிறைஸ்ட்சர்ச் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் அந்நாட்டு நாடாளுமன்றத்
தில் உரையாற்றிய நியூசிலாந்துப் பிரத மர் ஜெசிண்டா ஆர்டர்ன் பள்ளிவாசல் வழிபாட்டுக்குச் சென்றவர்களையும் போலிசாரையும் நாட்டின் மிக மோசமான இருள் சூழ்ந்த நாட்களில் அவர்கள் காட்டிய அசாதாரண தைரியத்திற் காக நேற்று அவர்களைப் பாராட்டி யுள்ளார்.
“வெளிப்படையான, அமைதி யான பன்முகத்தன்மை கொண்ட நாடாக விளங்கும் நியூசிலாந்தில் இது எப்படி நடந்திருக்கக்கூடும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 
“அத்துடன், இந்தத் தாக்குதல் தொடர்பில் மக்கள் கோபம் கொண்டுள்ளனர்,” என்று அவர் தமது உரையில் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய நியூசிலாந்து பிரதமர் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எவ்வித அச்சுறுத்தலும் தற்பொழுது இல்லை என்ற போதிலும், அதிகாரிகள் விழிப்பு நிலையில் உள்ளதோடு உயரிய தயார்நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
“பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிந்திய வாரங்கள் அதிகரித்த நெருக்குதல் நிறைந்ததாக இருக் கும் என்பதை பயங்கரவாதம் குறித்து அதிக அனுபவமுள்ள மற்ற நாடுகளிட மிருந்து நாம் தெரிந்துகொண்டுள்ளோம். 
“இதிலிருந்து நாம் விழிப்புநிலை யில் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது,” என்று அவர் விளக் கினார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

படங்கள்: நாங் முவி சான் ஃபேஸ்புக்

17 Jun 2019

கவர்ச்சி அழகி மருத்துவருக்கு மியன்மார் அரசு தடை

போலிசாரின் கட்டளையையும் மீறி அட்மிரல்டி பகுதியில் இரவு முழுவதும் வீதிகளிலேயே பல ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்துவருகின்றனர். படம்: நியூயார்க் டைம்ஸ்

17 Jun 2019

ஹாங்காங் அரசாங்க அலுவலகங்கள் இன்றும் மூடல்

இருளில் வாக்களித்த மக்கள். படம்: இபிஏ

17 Jun 2019

இணையத் தாக்குதலாக இருக்கக்கூடும் என அர்ஜெண்டினா அச்சம்