நடுக்கடலில் தீப்பற்றி வெடித்த எண்ணெய்க்கப்பல்

சவூதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெடாவுக்கு அருகில் ஈரானிய எண்ணெய்க்கப்பல் தீப்பற்றி வெடித்துள்ளது. ஈரானின்  தேசிய எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பலைப் பயங்கரவாதிகள் தாக்கியிருக்கக்கூடும் என்று ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன.

எண்ணெய்க் கப்பலிலிருந்து கரும்புகை வெளிவந்து கம்பம்போல உயர்ந்து வளர்வதை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட சில படங்கள் காட்டுகின்றன. அந்தக் கப்பலிலிருந்து செங்கடலில் எண்ணெய் பெருமளவு கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதும் கப்பலில் இருந்த பணியாளர்கள் எந்த ஆபத்துமின்றித் தப்பித்துக்கொண்டதாக ஈரான் தெரிவித்தது.

முன்னதாக சூசன்கிரிட் என்ற பெயரைக் கொண்ட இந்தக் கப்பல், ஒரு மில்லியன் கச்சா எண்ணெய்ப் பீப்பாய்களுடன் சிரியாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த மாத பிற்பகுதியில் ஈரானுக்கும் எண்ணெய்க் கப்பல்களுக்கும் தொடர்புடைய சில சம்பவங்கள் நடந்துள்ளன. ஈரானின் எண்ணெய்க்கப்பல் ஒன்று ஜிப்ரால்ட்டார் தீவில் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து  ஈரான் பிரிட்டிஷ் கொடியைத் தாங்கிய மற்றோர் எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றியது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஸ்பெயினின் கட்டலான் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலிசார் கண்ணீர்ப்புகை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி

16 Oct 2019

கட்டலான் தலைவர்களின் சிறைத் தண்டனையை எதிர்த்து ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம் வலுக்கிறது

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது நேற்று நீதிமன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.  படம்: ராய்ட்டர்ஸ்

16 Oct 2019

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு