சுடச் சுடச் செய்திகள்

கிராமத்தின் தெருவில் அடிக்கடி  பணக் கத்தைகள் கண்டுபிடிப்பு

லண்டன்: வடகிழக்கு இங்கிலாந்தில் பிளேக்ஹால் கொள்ளியரி என்ற ஒரு சிறு கிராமம், இப்போது மர்ம தேசமாக மாறியுள்ளது. கிராமத்தின் தெருவில் அடிக்கடி பணக் கத்தைகள் விட்டுச் செல்லப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை கிடைத்துள்ள மொத்த தொகை 26,000 பவுண்ட் (S$45,780).    

ஒவ்வொரு முறையும் பணக் கத்தைகள் 20 பவுண்ட் நோட்டு வடிவில் இருந்ததாகவும் 13 முறைகளிலும் 2,000 பவுண்ட் விட்டுச் செல்லப்பட்டதாகவும் போலிசார் கூறினர். வேண்டுமென்றே கண்ணில் படும் அளவுக்குப் பணக் கத்தைகள் நடைபாதைகளில் வைக்கப்பட்டன என்றும் அவற்றைக் கண்டெடுக்கும் பொதுமக்கள், உடனே போலிசாரிடம் ஒப்படைத்துவிடுவர் என்றும் கூறப்பட்டது. தர்மம் செய்ய விரும்பும் ஒரு நல்லுள்ளம் இவ்வாறு செய்து வருவதாக மக்கள் நம்புகின்றனர். ஆனால் அக்கிராமத்து மக்களும் நேர்மையாக நடந்துகொள்வதால் அவர்கள் பணத்தை வைத்துக்கொள்வதில்லை.