மலேசிய அமைச்சர்: தடுப்பூசி பாதுகாப்பானது, ஆற்றல்மிக்கது

பெட்­டா­லிங் ஜெயா: கொரோ னாவுக்கு எதி­ரான தடுப்­பூசி பாது­காப்­பா­னது, ஆற்­றல்­மிக்­கது என்று மலே­சிய அமைச்­சர் கைரி ஜமாலு­தின் உறு­தி­பட தெரி­வித்­தார்.

கொவிட்-19 தடுப்­பூ­சிக்கு எதி­ரான தரப்பினரின் கருத்­து­க­ளுக்­குப் பதில் அளிக்கும் வகையில் அவர் பேசி­னார். கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யும் வெறும் தண்­ணீ­ரைக் கொண்டு போடப்­படும் ஊசி­யும் ஒன்­று­தான் என்று அந்தத் தரப்பினர் கூறி வரு­கி­றார்­கள்.

இதே­வே­ளை­யில், தடுப்­பூசி போடப்­பட்­ட­வர்­களில் சில­ருக்கு கொவிட்-19 தொற்று ஏற்­பட்டு இருப்­ப­தாக சமூக ஊட­கங்­களில் வெளி­யான தக­வல்­களை மறுத்து நாட்­டின் அறி­வி­யல் தொழில்­நுட்ப புத்­தாக்­கத் துறை அமைச்­சர் அகம்­மது அம்­சாத் ஹஷிமும் விளக்­கம் அளித்­தார்.

தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர்­க­ளுக்­குத் தொற்று ஏற்­ப­டக்­கூடும் என்­றா­லும் அதற்­கான வாய்ப்­பு­கள் மிக­வும் குறைவு என்று அமைச்­சர் கைரி விளக்­கி­னார்.

மர­ணம் போன்ற கடும் பாதிப்பு­களைத் தடுப்­பூசி தடுத்துவிடும்­என்று அவர் கூறி­னார்.

இத­னி­டையே, மலே­சி­யா­வில் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­க­ளுக்கு கொரோனா தொற்று ஏற்­படும் வாய்ப்பு, தடுப்­பூசி இயக்­கத்­திற்கு முன்பு இருந்த அள­வை­விட 10 மடங்கு குறைவு என்று திரு அகம்­மது அம்­சாத் ஹஷிம் தெரி­வித்­தார்.

இரண்டு தவணை ஊசி­க­ளைப் போட்­டுக்­கொண்ட பிற­கும் 40 சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­க­ளுக்கு கொவிட்-19 கிருமி தொற்­றி­விட்­டது என்று சனிக்­கிழமை தக­வல்­கள் வெளி­யா­யின.

அதற்கு விளக்­கம் அளிக்­கும் வகை­யில் அமைச்­சர் புள்ளி விவரங்களை ­வெளி­யிட்­டார்.

நாட்­டில் 438,000 பேர் இரண்டு தவணை தடுப்­பூ­சி­க­ளைப் போட்டுக் கொண்டு இருக்­கி­றார்­கள்.

இந்த மொத்த எண்­ணிக்­கை­யு­டன் ஒப்பிட்டுப் பார்க்­கும்­போது 40 என்பது மிக­வும் குறைவு என்­றார் அமைச்­சர். கிருமி தொற்­றிய 40 பேருக்­கும் கடு­மை­யான அறி­கு­றி­கள் இல்லை என்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார். நாட்டில் தடுப்பூசி 2வது கட்டம் நேற்று தொடங்கியது.

இத­னி­டையே, கொவிட்-19 பிரச்சி­னை­களை அர­சாங்­கம் சரி வர கையா­ள­வில்லை என்­றும் நாட்­டின் மன்­னர் அண்­மை­யில் ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­க­ளுக்குச் சென்று இருந்­த­போது மலேசியாவில் அங்கீ கரிக்கப்படாத தடுப்­பூசியை அங்கு போட்­டுக்­கொண்­ட­தாக தக­வல்­கள் வெளி­யா­னது குறித்­தும் இணை­ய­வா­சி­கள் பலரும் கோபம் தெரி­வித்­த­னர்.

என்றாலும் ஏஷியா சென்டினல் என்ற செய்தித்தளத்தில் வெளியான அந்தச் செய்தியை மலேசிய சுகாதார அமைச்சர் ஆதம் பாபா மறுத்தார்.

மலே­சி­யா­வில் சென்ற ஆண்டு கொவிட்-19 தலை­காட்­டி­யது முதலே அர­சு இரட்டை அணுகு­ மு­றை­யைக் கையாண்டு வரு­வ­தாக அந்த நாட்டு மக்­கள் கோபத்தை வெளிப்­ப­டுத்தி வரு­கி­றார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!